முகத்தைப் பார்த்து பௌர்ணமி நிலவு போல் ஜொலிக்கிறது என்று வர்ணிக்கும் அளவிற்கு பிரகாசத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பல வழிகளில் முயற்சி செய்வார்கள். இந்த எளிமையான ஒரே ஒரு ஃபேஸ் மாஸ்க்கை போட்டால் முகம் பிரகாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல அற்புதமான பலன்களையும் பெற முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதற்கு உதவக்கூடிய ஃபேஸ் மாஸ்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
முகம் என்று சொன்னால் அதில் மாசு மரு என்று எதுவும் இருக்கக் கூடாது என்பார்கள். அந்த அளவிற்கு முகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணம். அப்படிப்பட்ட சுத்தமான பிரகாசமான முகத்தை பெறுவதற்கு நாம் பல வழிகளில் முயற்சி செய்திருந்தாலும் இந்த முறையை பயன்படுத்தினால் கண்டிப்பான முறையில் பொலிவான பிரகாசமான முகத்தை பெற முடியும். இந்த ஃபேஸ் மாஸ்கிற்கு நமக்கு தேவைப்படுவது சார்கோல். கறி துகள்களை தான் நாம் சார்கோல் என்று அழைக்கிறோம். இது அனைத்து டிபாட்மென்டல் ஸ்டோர் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும்.
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சார்கோல் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வேப்ப இலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இப்பொழுது ஃபேஸ் மாஸ்க் தயாராகிவிட்டது. வறண்ட சருமமாக இருப்பவர்கள் இதனுடன் விட்டமின் இ கேப்ஸ்யூல் அல்லது பாதாம் எண்ணெய் இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். முக்கியமான குறிப்பு கண்களுக்கு அருகில் இதை தடவுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வாறு தடவிய பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி விட வேண்டும்.
இந்த சார்கோல் ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்தினால் நம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். ஓபன் போர்ஸ் என்று சொல்லக்கூடிய சரும துவாரங்களுக்குள் இருக்கும் அழுக்குகள் சுத்தமாக நீங்கி அது மூட ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமையும் நீங்குவதற்கு உதவுகிறது. இதில் வேப்ப இலை பொடியை சேர்த்து இருப்பதால் அது முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்கும், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையவும் உதவி செய்கிறது.
இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுத்து வேகமாக வளர வைக்க உதவும் ஹேர் மாஸ்க்.
இந்த ஃபேஸ் பேக்கை இளைய தலைமுறை பயன்படுத்தி முகத்தை பொலிவுடன் பிரகாசத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.