முடி உதிர்வை தடுத்து வேகமாக வளர வைக்க உதவும் ஹேர் மாஸ்க்.

hair fall mask
- Advertisement -

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய்கள், ஹேர் மாஸ்க், ட்ரீட்மென்ட் என்று பல முயற்சிகளை செய்தும் தலைமுடி உதிர்வு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த ஹேர் மாஸ்கை ஒரு மாதம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தினால் அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளும் நீங்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர உதவக்கூடிய ஹேர் மாஸ்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி பிரச்சனை என்று வந்ததும் நம் நினைவிற்கு முதலில் வருவது தலைமுடி உதிர்வு, தலைமுடி வளர்ச்சியின்மை, பொடுகு, இளநரை போன்றவை தான். இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய அற்புதமான ஹேர் மாஸ்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த ஹேர் மாஸ்கிற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் கருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் தேங்காய் பால். கருஞ்சீரகம் இயற்கையிலேயே முடி வளர்ச்சியை தூண்டக்கூடியதாக திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் இளநரை பிரச்சினையையும் தீர்க்க உதவுகிறது.

- Advertisement -

வெந்தயம் உடல் சூட்டை தணித்து முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து நிறுத்துகிறது. தேங்காய்ப்பாலில் இருக்கக்கூடிய அற்புதமான சத்துக்கள் நம் தலைமுடியை ஆரோக்கியமாக வளர உதவுகிறது. அதே சமயம் இது ஒரு நல்ல கண்டிஷ்னராகவும் திகழ்கிறது. கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் தனித்தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகப் பொடியையும், மூன்று ஸ்பூன் அளவிற்கு வெந்தய பொடியையும் சேர்த்து தேவையான அளவு தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளறி கொள்ளுங்கள். இப்பொழுது ஹேர் மாஸ் தயாராகிவிட்டது. இந்த ஹேர் மாஸ்கை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். மீதம் இருப்பதை முடியில் தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவ வேண்டும் அதுதான் முக்கியம். இவ்வாறு தடவிய பிறகு ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு எப்போதும் போல் தலைக்கு குளித்து விடலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் மார்க்கை நாம் பயன்படுத்தும் பொழுது ஒரு மாதத்திலேயே தலைமுடி உதிர்வு முழுவதும் நின்று விடும்.

அதே சமயம் முடி வளர்ச்சியும் எப்போதும் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வளர்ந்து இருக்கும். அது மட்டுமல்லாமல் இளநரை பிரச்சினை இருப்பவர்களுக்கு அந்த பிரச்சினையையும் தீர்க்க இந்த ஹேர் மாஸ்க் உதவி புரியும்.

இதையும் படிக்கலாமே: முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்

மிகவும் மலிவாகவும் அதேசமயம் எளிமையாகவும் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து ஹேர் மாஸ்க் செய்து தலைமுடி பிரச்சனைகள் அனைத்திலும் இருந்தும் விடுபடலாம்.

- Advertisement -