சிக்கு எடுக்கும்போது கூட உங்களுடைய தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது. சூப்பரான செம்பருத்தி ஹேர் பேக் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க.

hair4
- Advertisement -

முடி உதிர்வை நிறுத்துவதற்கு நாம் நிறைய ஹேர் பேக், ஆயில், ஷாம்பு இவைகளை பயன்படுத்தி இருப்போம். ஆனாலும் முடி உதிர்வு குறைந்த பாடாக இருக்காது. நீங்கள் அழுத்தம் கொடுத்து நிறைய சிக்கு உள்ள தலைமுடியை, சிக்கு எடுத்தால் கூட, தலையில் இருந்து முடி அவ்வளவு சீக்கிரத்தில் உதிராமல் இருக்க சூப்பரான இயற்கையான ஒரு ஹேர் பேக்கை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முடி வளர்ச்சிக்கு இந்த ஹேர் பேக் அருமையான ஒரு ரெமெடி. வாங்க அந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெந்தயம் – 2 ஸ்பூன், செம்பருத்தி பூ – 10, செம்பருத்தி இலை – 10, இந்த மூன்று பொருட்களையும் போட்டு இதை அரிசி களைந்த தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதாவது அரிசி கழுவிய தண்ணீர். (அரிசியை முதல்முறை கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி அரிசியை ஊற வைத்துவிட்டு, அரிசி கழுவிய அந்த தண்ணீரை ஹேர் பேகுக்கு பயன்படுத்தினால் அவ்வளவு நல்லது.)

- Advertisement -

இந்த எல்லாப் பொருட்களும் 8 மணி நேரம், அரிசி தண்ணீரிலேயே நன்றாக ஊற வேண்டும். அதாவது மறுநாள் காலை ஹேர் பேக்கை போட வேண்டுமென்றால், முந்தைய நாள் இரவே இதையெல்லாம் அரிசி களைந்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட வேண்டும். மாலை நேரத்தில் ஹேர்பேக் போடுவதாக இருந்தால் காலையிலேயே இந்த பொருட்களை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பொருட்கள் எல்லாம் நன்றாக அரிசி களைந்த தண்ணீரில் ஊறிய பின்பு, இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது. அரிசி தண்ணீரே போதுமானது. அரைத்த இந்த விழுதை அப்படியே ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி விடுங்கள். வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் காட்டன் துப்பட்டாவில் வடிகட்டினால், வடிகட்டுவது சுலபமாக இருக்கும்.

- Advertisement -

இப்போது உங்களுக்குக் க்ரீமியான மொழுமொழுவென ஒரு ஹேர்பேக் சூப்பராக கிடைத்திருக்கும். இது பார்ப்பதற்கு ஷாம்பு போலவே இருக்கும். இந்த ஹேர் பேக்குடன் 2 முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து ஒரு முறை நன்றாக கரண்டியால் கலக்கி கொடுங்கள். அவ்வளவு தான் தலைமுடிக்கு போடக்கூடிய ஹேர் பேக் தயார். (உங்களுக்கு முட்டையின் வாடை பிடிக்காதா. முட்டைக்கு பதிலாக 4 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

முதலில் தலைமுடியில் மயிர்க்கால்களில், முடியின் வேர் பகுதியில் படும்படி இந்த ஹேர் பேக்கை போட்டு, அதன் பின்பு முடியின் நுனி வரை எல்லா இடங்களிலும் இந்த ஹேர் பேக்கை அப்படியே அப்ளை செய்து விடுங்கள். கொண்டை கட்டவேண்டாம். முடியை அப்படியே நீளமாக வைத்து, நீள்வாக்கில் ஹேர் பேக்கை அப்ளை செய்து கொடுங்கள்.

ஹேர் பேக்கை அப்ளை செய்துவிட்டு 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை அப்படியே ஊறட்டும். முடி நீல வாக்கிலேயே இருக்கட்டும். இதில் நாம் முட்டை சேர்த்து இருப்பதால், உங்களுடைய முடி ஹேர்பேக்குடன் காயக்காய, அப்படியே ஸ்டிக்கி ஆக நிற்கும். அதன்பின்பு நல்ல ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு முடியை சுத்தமாக அலசி விடுங்கள்.

தலை குளித்துவிட்டு தலையை நன்றாக காய வைத்த பின்பு உங்களுடைய முடியில் நல்ல வித்தியாசம் தெரியும். முடி சாஃப்ட்டாக பவுன்சியாக ஸ்டைட்டாக இருக்கும். தலைக்கு குளிக்கும் போதும் வித்தியாசம் தெரியும். தலைக்கு குளித்தபின்பு முடியை சிக்கு எடுக்கும் போதும், உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இதற்கு முன்பு இருந்த முடி உதிர்வுக்கும் இப்போது இருக்கக்கூடிய முடி உதிர்வுக்கும். வாரத்தில் 1 நாள் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. மிஸ் பண்ணாதீங்க முடி உதிர்வு உடனடியாக நிறுத்தப்பட்டு, முடி அடர்த்தியாக உடனடியாக வளர தொடங்கும்.

- Advertisement -