இந்த பரிகாரத்திற்கும் “மேஜிக் பரிகாரம்” என்று கூட நீங்கள் பெயரை வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு செக் லீஃப் உங்கள் கையில் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை செய்த அடுத்த 21 நாட்களில் நீங்கள் கேட்ட பணத்தை இந்த பிரபஞ்சம் உங்களிடம் கொடுக்கும். உங்களுடைய கடன் சுமையை குறைக்க பணம் தானாக உங்களைத் தேடி வரும். எப்படி?
மந்திரம் போட்டது போல ஏதாவது மாயஜாலம் நடக்குமா. ஏதோ ஒன்று நிச்சயம் ஒரு நல்லது நடக்கும்ங்க. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவுமே பார்க்க வேண்டாம். நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை இப்போதே நீங்கள் செய்யலாம்.
ஒரு செக்க் லீஃப் எடுத்துக்கோங்க. எந்த பேங்கோட செக் லீஃப் ஆக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் பேங்க் அக்கவுண்டில் பணமே இல்லை என்றாலும் பரவாயில்லை. அந்த செக் லீஃப்பில் உங்களுக்கு தற்போது எவ்வளவு பணம் தேவை. அந்த தொகையை எழுதி விடுங்கள். உங்களுடைய கையெழுத்தையும் குலதெய்வத்தை நினைத்து போட்டு விடுங்கள். ஒரு செக் லீஃபில் என்னவெல்லாம் எழுத வேண்டுமோ அதை எல்லாம் எழுதிவிட்டு செக்கை எடுத்து ஓரமாக வைத்து விடுங்கள்.
அடுத்தபடியாக ஒரு வெள்ளை காகிதத்தில், கடனை அடைக்க உங்களுக்கு தேவையான தொகை கிடைத்து விட்டதாக எழுத வேண்டும். உதாரணத்திற்கு செக்கில் இரண்டு லட்சம் தொகையை எழுதி வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த இரண்டு லட்சம் பணம் எனக்கு கிடைத்துவிட்டது. நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்னுடைய கடன் சுமை குறைந்து விட்டது.
குடும்பம் அவமானத்திலிருந்து தப்பித்தது குடும்பத்திற்கு சந்தோஷம் கிடைத்தது. என்று எழுதி, அந்த பேப்பருக்கு நடுவே, எழுதி வைத்திருக்கும் செக் லீஃபை வைத்து மடித்து பத்திரமாக ஒரு நோட்டு புத்தகத்திலோ அல்லது புத்தகத்திலோ வைத்து அலமாரியில் வைத்து விடுங்கள். 21 நாட்கள் நீங்க பாட்டுக்கு உங்களுடைய வேலையை பார்க்க வேண்டும்.
அதாவது இந்த பணம் உங்கள் கைக்கு வர வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள் அல்லவா. அந்த வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருங்கள். 21 நாளில் நீங்கள் அந்த செக் லீஃபில் எழுதிய தொகை உங்க பேங்க் அக்கவுண்டுக்கு வந்திருக்கும்.
ஒரு இடத்தில் என்னுடைய பணம் மாட்டிக் கொண்டிருக்கிறது. அந்த சிக்கல் தீர்ந்து விட்டால் இந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் என் கைக்கு வந்து விடும். நீண்ட நாள் ஒருவர் என்னிடம் கடன் வாங்கிவிட்டு, அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்து அடிக்கின்றார். இதுபோல பிரச்சனைகளில் நிறைய பேர் சிக்கி இருப்பார்கள்.
வரவேண்டிய பணம் கைக்கு வராமல் பல வருடங்களாக தடையாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் சிக்கியிருந்தால் இந்த பரிகாரத்தை உடனடியாக செய்யுங்கள். உங்கள் பணம் உங்கள் வீடு தேடி நிச்சயம் வரும். சரி 21 நாள் கழித்து அந்த பேப்பரையும் செக் லீஃபையும் என்ன செய்வது.
இதையும் படிக்கலாமே: 18-05-2025 அதி சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரம் நேரம் எப்போது வருகிறது?
பணம் வந்தாலும் பணம் வரவில்லை என்றாலும் அந்த பேப்பரையும் செக் லீஃபையும் நெருப்பில் எரித்து விடுங்கள். சாம்பலை தண்ணீரில் கரைத்து சிங்கிள் கொட்டி விடுங்கள். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பரிகாரம் பலிக்கும் இந்த தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.