- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்செட்டிநாடு ஸ்டைல் பிரண்டை துவையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது.

செட்டிநாடு ஸ்டைல் பிரண்டை துவையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது.

- Advertisement -

மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. பிரண்டைத் துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் வரக்கூடிய குறிப்புகளை பின்பற்றி இந்த பிரண்டைத் துவையலை பக்குவமாக செய்தால் நான்கு நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

pirandai-podi2

முதலில் ஒரு கட்டு பிரண்டையை வாங்கி அதில் இருக்கும் நாரை எடுத்து பொடிதாக வெட்டி, அலசி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் முத்திய பிரண்டையாக இருந்தால் அதில் நார் வரும். அந்த நாரை நீக்கி விடவேண்டும். பிரண்டையை உடைத்து எடுக்கும்போது நாரை கூடவே உறுத்து எடுக்க வேண்டும். அவரைக்காயை உரித்து நார் எடுப்போம் அல்லவா அதேபோல்தான்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவைப்படும். அப்போதுதான் பிரண்டை துவையல் கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, பூண்டு – 2 பல், வர மிளகாய் – 6, தோலுரித்த சின்ன வெங்காயம் – 12 பல், இந்த பொருட்களை போட்டு முதலில் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் லேசாக சுருங்கி வரும் வரை வதக்கினால் போதும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள்.

pirandai-thuvaiyal2

அடுத்தபடியாக பொடியாக வெட்டி வைத்திருக்கும் பிரண்டையை கடாயில் போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவேண்டும். (ஒரு இன்ச் அளவிற்கு பிரண்டையை வெட்டி வைத்துக் கொண்டால் போதும்.) பச்சையாக இருக்கும் பிரண்டை, மஞ்சள் நிறத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். சரியாக வதக்கவில்லை என்றால் பிரண்டையை சாப்பிடும்போது அரிப்பு ஏற்படும்.

- Advertisement -

பிரண்டை நன்றாக வெந்து வதங்கி வந்த பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளியின் தோல் சுருங்கி வெந்து வரும் வரை வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு அப்படியே அம்மியில் வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் செம டேஸ்டா இருக்கும்.

pirandai-thuvaiyal1

இந்த காலகட்டத்தில் அம்மியில் துவையல் அரைப்பது எல்லாம் சாத்தியம் இல்லை. மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கெட்டியாக துவையல் போல கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இந்த துவையலை சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.

pirandai-thuvaiyal3

துவையலில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து சட்னி போல இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். அரைத்த இந்தத் துவையலை கைபடாமல் தண்ணீர் படாமல் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் நான்கு நாட்கள் வரை கெட்டுப் போகாது.

pirandai-thuvaiyal4

பின் குறிப்பு: பிரண்டை துவையலில் சில சமயம் அரிப்பு ஏற்படும் சாப்பிடும்போது. அந்த அரிப்பு உங்களுக்கு துவையலில் இருந்தால், லேசாக புளிக் கரைசலை துவையலில் ஊற்றி கடாயில் போட்டு பிரட்டி சூடு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது அந்த அரிப்பு தன்மை துவையலில் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்ல ரெசிபி இது.

சற்று முன்