வெள்ளை நிறத்தில் செட்டிநாடு தேன்குழல் முறுக்கு செய்வது இத்தனை ஈசியா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய் விட்டதே!

- Advertisement -

கடைகளில் வெள்ளை நிறத்தில் விற்கக்கூடிய தேன்குழல் முறுக்கு நம்முடைய வீட்டில் சுலபமாக செய்ய முடியும். அது எப்படி என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே வீட்டில் முறுக்கு சுட்டால் அது சிவந்த நிறத்தில் தான் வரும் அல்லவா? கடைகளில் விற்கும் முறுக்கு மட்டும் எப்படி வெள்ளையாக உள்ளது? அந்த முறுக்கை எப்படி செய்கிறார்கள்? சிலபேர் இதை தேங்காய்ப்பால் முறுக்கு என்றும் சொல்லுவார்கள். இந்த முறையில் நாம் தேங்காய் பால் ஊற்ற போவதில்லை. சுலபமான முறையில் வெள்ளை முறுக்கு எப்படி செய்வது பார்த்து விடலாமா?

muruku1

தேன்குழல் முறுக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மாவு பச்சரிசி – 4 கப், உளுந்து – 1 கப், வெண்ணை – 1 ஸ்பூன்,  தேவையான அளவு உப்பு, எள்ளு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் 1/4 ஸ்பூன், முறுக்கை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

- Advertisement -

எந்த ஆழாக்கில் பச்சரிசி மாவை அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே ஆழாக்கில் உளுந்தையும் அடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடையில் அரிசியை கேட்டு வாங்கும் போது, முறுக்கு சுடுவதற்கு மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்குங்கள். இதை பார்ப்பதற்கு அரிசியின் உள்ளே வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் முறுக்கு சுட்டால் தான் வெள்ளை நிறத்தில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

muruku4

Step 1:
முதலில் இந்த அரிசியை இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை நன்றாக சல்லடையில் போட்டு வடித்துவிட்டு, அதன் பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து அதன் மேல் பரப்பி, நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் காய வைக்கவேண்டும். அரிசியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக்கூடாது. உங்கள் ஊரில் நன்றாக வெயில் காயும் போது, இந்த மாவைத் தயார் செய்து, ஆர வைத்து, பிறகு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் முறுக்கு சுட்டு கொள்ளலாம்.

- Advertisement -

காய்ந்த இந்த மாவை ரைஸ் மில்லில் கொடுத்து பக்குவமாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கம்பு மாவு, கோதுமை மாவு அரைத்து விட்டு இந்த மாவை அரைத்தால் நிச்சயம் அந்த மற்ற மாவின் வாடை, முறுக்கிலும் அடித்து விடும். வெள்ளை நிறம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அரிசிமாவை உஷாராக பக்குவமாக அரைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

muruku2

Step 2:
அதன்பின்பு தயாராக இருக்கும் உளுந்தை கடாயில் வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, உளுந்தை வறுக்க வேண்டும். உளுந்து சிவப்பு நிறமாக மாற கூடாது. அதே சமயம் உளுந்து  நன்றாக சூடாக வேண்டும். உளுந்து வறுபடும் வாசம் லேசாக வந்ததும், உடனே அடுப்பை அணைத்து விட்டு, வேறு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். உளுந்து நைஸாக அரைக்கவும். உளுந்தை சிவப்பு நிறமாக வறுத்தாலும், முறுக்கு வெள்ளை நிறத்தில் வராது.

- Advertisement -

muruku 1

Step 3:
இப்போது அரிசி மாவும் உளுந்து மாவும் தயாராக உள்ளது. ஒரு அகலமான பேசனில் இரண்டு மாவையும் கொட்டி, முதலில் கலந்துவிட வேண்டும். வெண்ணை, எள்ளு, சீரகம், தேவையான அளவு உப்பு, பெருங்காயம், போட்டு தண்ணீரைத் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.

muruku 2

அதன் பின்பாக எப்பவும் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழிவது போல், ஜல்லிக்கரண்டி மேல் லேசாக எண்ணெயைத் தடவி முறுக்கை பிழிந்து, எண்ணெய் சட்டியில் விட வேண்டியது தான். எண்ணெய் குறிப்பாக மிதமான தீயில் இருக்க வேண்டும். இந்த முறுக்கு வெள்ளை நிற தேன்குழல் முறுக்கு, பிரவுன் கலர் வரும் வரை சிவக்க விட்டு விடாதீர்கள்.

Step 4:
எண்ணெயில் விட்டதும் முறுக்கு வெந்து அதனுடைய சிட சிடப்பு அடங்கிய உடனேயே, முறுக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் போதே, எண்ணெய் சட்டியில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். அதன் பின்பு கொஞ்ச நேரம் ஆற விட்டு முறுக்கை சுவைத்துப் பாருங்கள். மொறுமொறுவென்று அசத்தலான சுவையில் உங்கள் வீட்டு தேன்குழல் முறுக்கு தயாராக இருக்கும். இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் தேன்குழல் முறுக்கு கட்டாயம் இருக்கும் அல்லவா?

- Advertisement -