இப்படி ஒரு வாழைக்காய் வருவலை, உங்கள் வாழ்நாளில் சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க! செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் ஃப்ரை எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

vazhakai-fry
- Advertisement -

இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து, கொஞ்சம் வித்தியாசமாக செய்ய போகும் ரெசிபி இது. ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சு முடிச்சிடலாம். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேண்டாம் என்று மறுக்காமல் சாப்பிடும் டிஷ் தான் இது. தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம், எதற்கு வேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் ஃப்ரை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

vazhakai-fry1

Step 1:
பெரிய அளவில் இருக்கும் 2 வாழைக்காய்களை, முதலில் எடுத்து தோல் சீவி நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 4 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, தண்ணீரில் வெட்டி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை எடுத்து கடாயில் போட்டு, 1/4 ஸ்பூன் உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை வறுத்து எடுக்க வேண்டும். வாழைக்காய் முக்கால் பாகம் வேக வேண்டும். மொறுமொறுவென்று சிப்ஸ் போல மாறக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த வாழைக்காய் துண்டுகளை எண்ணெயில் இருந்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

vazhakai-fry2

Step 2:
இப்போது அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில் சோம்பு 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய பூண்டு – 10 பல், இவைகளை ஒன்றாக சேர்த்து பொரிய விட வேண்டும். எல்லா பொருட்களையும் மிக மிக பொடியாக நறுக்க வேண்டும்.

- Advertisement -

Step 3:
அடுத்தபடியாக மிக மிக பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். நாம் எண்ணெயில் சேர்த்த இந்த பொருட்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமல் வறுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் பின்பு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இவைகள் அனைத்தையும் கடாயில் சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.

fry

இறுதியாக மிகவும் பொடியாக நறுக்கிய 1 தக்காளி பழத்தை சேர்த்து, கண்ணுக்குத் தெரியாமல் வதக்கி விடுங்கள். இப்போது மசாலாவுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

vazhakai-fry4

தக்காளியின் பச்சை வாடை போய், கடையில் இருக்கும் பொருட்கள் எல்லாம் டிரை ஃபிரை ஆகியிருக்கும். இறுதியாக வறுத்து வைத்திருக்கும் வாழைக்காய்களை கடாயில் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்தால் சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் ஃப்ரை தயார். ஒரே ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க செம டேஸ்டா இருக்கும்.

இதையும் படிக்கலாமே
அட, அவல் வைத்து இப்படி ஒரு அடையை செய்ய முடியுமா? அதுவும் வெறும் 10 நிமிஷத்துல! மிஸ் பண்ணாம பாத்து தெரிஞ்சுக்கோங்க! சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் இது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -