செட்டிநாட்டு சமையல் வாசத்தோட வெஜிடபிள் பிரியாணி செய்ய தெரியுமா உங்களுக்கு? தெரியாதுன்னா இந்த ரெசிபியை படிச்சு தெரிஞ்சுக்கோங்க. இப்பவே!

biriyani
- Advertisement -

செட்டிநாடு சமையலுக்கு என்று ஒரு தனி வாசம் உள்ளது. அந்த மசாலா பொடியை அரைத்து வைத்து விட்டால் வெஜிடபிள் பிரிந்தியை சும்மா மணக்க மணக்க நம்முடைய வீட்டில் செய்யலாம். அதுவும் செட்டிநாடு சுவையில். கேட்கும்போதே நமக்கு ஏதோ ஒரு வாசம் வீசுதுல்ல. நம்முடைய வீட்டில் இந்த பிரியாணியை சமைத்தால் எப்படி இருக்கும். ஆஹா ஒரு முறை ட்ரை பண்ணி பார்ப்போமா. அதற்கு ரெசிபி தெரியணுமே. இதோ இப்பவே இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்களுக்காக செட்டிநாடு சுவையில் வெஜிடபிள் பிரியாணி ரெசிபி.

செய்முறை

செட்டிநாடு ரெசிபிக்குன்னு ஒரு தனி சுவை வாசம் இருக்கு அல்லவா. அதற்கு ஒரு ஸ்பெஷல் மசாலா அரைக்க போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 இன்ச் அளவில் பட்டை துண்டு – 4 (சின்ன சின்னதாக உடைத்து போட்டுக் கொள்ளவும்), பிரியாணி இலை – 1 (கிழித்து போடவும்), வரமிளகாய் – 10, நட்சத்திர சோம்பு – 1, போட்டு முதலில் இந்த நான்கு பொருட்களையும் ஒரு நிமிடம் வறுத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு இதோடு மிளகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 2 கொத்து, ஏலக்காய் – 15, கிராம்பு – 15, வரமல்லி – 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், போட்டு இந்த பொருட்களை எல்லாம் லேசாக வாசம் வரும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த பொருளும் கருகக் கூடாது. வறுத்த  இந்த பொருட்களை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்து மிக்ஸி ஜாரில் பொடி செய்தால் செட்டிநாடு பிரிந்தி மசாலா பொடி தயார். இதை ஒரு பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது பிரிந்தி சால்னா குருமா போன்ற ரெசிபிகளுக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணிக்கு எல்லாம் கூட இந்த பொடியை சேர்த்தால் சுவையாக இருக்கும். இப்போது இதை வைத்து எப்படி பிரிந்தி செய்வது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

1 கப் அரிசியை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி, சாப்பாட்டு அரிசி எதில் வேண்டுமென்றாலும் இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம். ஆனால் தண்ணீரை மட்டும் அதற்கு ஏற்றவாறு பார்த்து நீங்கள் ஊற்றிக் கொள்ளவும். 1 டம்ளர் அரிசிக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் எல்லாம் சரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் நெய், ஊற்றி அது காய்ந்ததும் நீலவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 2, போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தக்காளி பழம் பெரியது – 1 இந்த பொருட்களை எல்லாம் நறுக்கி போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காய்கறிகளில் எல்லாம் ஒவ்வொரு கைப்பிடி இருந்தால் போதும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து நாம் அறைத்து வைத்திருக்கும் செட்டிநாடு மசாலாவில் இருந்து – 3 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக கலந்து விடுங்கள்.

இறுதியாக புதினா இலை – 15, கொத்தமல்லி தழை – சிறிதளவு தூவி, ஒரு நிமிடம் போல வதக்கி – 1 கப் அளவு அரிசிக்கு, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால், உப்பு சரிபார்த்து கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள்.

இதுவே பாஸ்மதி அரிசியாக இருந்தால் 1 கப் அளவு அரிசிக்கு, 1 1 1/2 கப் அளவு தண்ணீர் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசியை இதில் போட்டு நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி மீடியம் ஃபிளேமில் மூன்று விசில் வைக்கவும். பாசுமதி அரிசியாசியாக இருந்தால் இரண்டு விசில் போதும். விசிலை மட்டும் கணக்கு பார்த்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இவ்வளவு ஈஸியா, இவ்வளவு சத்தான துவையலை, இவ்வளவு ருசியாக கூட அரைக்க முடியுமா? இந்த ரெசிபியை தெரிஞ்சுகிட்டா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக, அழகாக இருப்பார்கள்.

பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பாருங்கள். இதிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் அப்படி பசியை தூண்டும். காலையில லஞ்ச் பாக்ஸுக்கு இது சூப்பரான ரெசிபிங்க. இந்த மசாலாவை முந்தைய நாள் அரைத்து வைத்துக் கொண்டால் 1/2 மணி நேரத்தில் காலையில் சமையல் ருசியாக முடிந்துவிடும். ரெசிபி பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -