இவ்வளவு ஈஸியா, இவ்வளவு சத்தான துவையலை, இவ்வளவு ருசியாக கூட அரைக்க முடியுமா? இந்த ரெசிபியை தெரிஞ்சுகிட்டா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக, அழகாக இருப்பார்கள்.

thuvaiyal
- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் அழகாகவும் இருக்க வேண்டும். அழகாக இருக்க முதலில் நாம் எதை கவனிக்க வேண்டும். நம்முடைய தலைமுடி. அது சீக்கிரம் வெள்ளையாக கூடாது. சீக்கிரம் உதிர்ந்து போகக்கூடாது. இந்த இரண்டு விஷயங்கள் தள்ளிப் போனால் நம்முடைய இளமை எப்போதும் நம் கூடவே இருக்கும். இதற்கு முக்கியமாக நாம் சாப்பிட வேண்டிய பொருள் என்ன. கருவேப்பிலை, தினமும் இலவசமாக காய்கறி கடைகளில் கிடைக்கிறது. சில கடைகளில் ஐந்து ரூபாய் கொடுத்தாலே கிடைக்கும். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்துவது இல்லை. வாரத்தில் ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ இந்த துவையலை செய்து கொடுங்கள்.

இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இல்லை சுட சுட சாதத்தில் துவையலை போட்டு நெய் விட்டு சாப்பிடலாம். மணக்க மணக்க சூப்பராக இருக்கும். குழந்தைகள் கூட இதை வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அந்த துவையல் ரெசிபியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 2 ஸ்பூன், போட்டுக் கொள்ளவும். இந்த இரண்டு பொருட்களும் முக்கால் பாகம் வறுபட்டு வந்தவுடன் வர மல்லி 1 ஸ்பூன், வர மிளகாய் 3, தோல் உரித்த பூண்டு பல் 6, போட்டு பொன்னிறமாக வறுத்து விடுங்கள். வர மல்லி நல்ல சிவந்து வரும்போது, வாசம் வரும் அந்த சமயத்தில் சுத்தம் செய்த 2 கைப்பிடி அளவு கருவாப்பிலைகளை இதில் போட்டு வதக்கவும்.

ரொம்பவும் மொறுமொறுப்பாக ஆகும் அளவிற்கு வதக்க வேண்டாம். அந்த பச்சை தன்மை போகும் அளவுக்கு, பச்சை கருவேப்பிலை சிடசிடப்பு தன்மை அடங்கும் அளவுக்கு வறுத்து, இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை இதில் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

தேவைப்பட்டால் இதனுடைய துவர்ப்பு சுவை கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டும் என்றால் இதில் சின்ன துண்டு வெல்லம் சேர்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் வெல்லத்தை தவிர்த்துக் கொள்ளலாம். இறுதியாக பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைக்கவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒரேடியாக மிக்ஸியை ஓட விடாதீங்க. விட்டுவிட்டு பல்ஸ் மோடில் அறையுங்கள். அப்போதுதான் சட்னி சுவையாக இருக்கும். சட்னி லேசான கொரகொரப்பு தன்மையோடு இருக்கும்போது சாப்பிட நன்றாக இருக்கும். ஆகவே 25 சதவிகிதம் சட்னியை அரைத்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: ரேஷனில் கிடைக்கும் அரிசியும், துவரம் பருப்பும் இருந்தா நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியான இந்த தோசை சுட்டு சாப்பிடலாம். அட்டகாசமான இந்த தோசைக்கு சைடிஸ் கூட தேவையில்லை.

அரைத்த இந்த சட்னியை கெட்டியாக துவையல் பதத்தில் சாதத்திற்கு போட்டு பிசைந்து சாப்பிட வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து இதற்கு நல்லெண்ணையில் கடுகு, உளுந்து, வர மிளகாய், தாளித்துக் கொட்டி கூட சூப்பராக மணக்க மணக்க இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள பரிமாறலாம். இந்த அருமையான துவையல் ரெசிபி பிடித்தவர்கள் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகும் கிடைக்கும். அதே சமயம் நாவிற்கு சுவையான துவையலும் கிடைக்கும்.

- Advertisement -