செட்டிநாடு ஸ்டைலில் ரொம்ப ரொம்ப ஈசியாக நம்முடைய வீட்டில் காரசாரமான காரச் சட்னி ரெசிபி எப்படி செய்வது? இந்த சட்னிக்கு 10 இட்லி கூட பத்தவே பத்தாது, அவ்ளோ ருசியாக இருக்கும்!

milagai-kara-chutney_tamil
- Advertisement -

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி

செட்டிநாடு ஸ்டைலில் எதை செய்தாலும் அது செம டேஸ்டாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் காரசாரமான நாவூரும் சுவையில் கார சட்னி ரொம்ப எளிதாக நம்முடைய வீட்டில் எப்படி செய்வது? இந்த கார சட்னி ரெசிபிக்கு எவ்வளவு இட்லி, தோசை கொடுத்தாலும் நமக்கு சலிக்கவே சலிக்காது சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும் இந்த செட்டிநாடு கார சட்னி ரெசிபி எப்படி செய்வது? என்று இனி இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செட்டிநாடு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, காய்ந்த மிளகாய் – 15, இஞ்சி – 2 இன்ச், பூண்டு – 15, கருவேப்பிலை, கொத்தமல்லி – தலா அரை கைப்பிடி, புதினா இலைகள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ரெண்டு பின்ச், வெறும் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

செட்டிநாடு கார சட்னி செய்முறை விளக்கம்:

கார சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் பொழுது தான் செட்டிநாடு கார சட்னி சுவையாக இருக்கும், எனவே இதை தவிர்க்க வேண்டாம். எண்ணெய் காய்ந்து வந்ததும் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி சேர்த்ததும் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக நுரை வர வறுப்படும் பொழுது நீங்கள் காம்புகள் நீக்கிய காய்ந்த மிளகாய்களை சேர்க்க வேண்டும். நீட்டு மிளகாய் விட குண்டு மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள், கார சட்னி சூப்பராக இருக்கும். இதனுடன் அரை கைப்பிடி அளவிற்கு அதாவது ரெண்டு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை லேசாக வறுபட்டதும் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். கண்ணாடி பதம் வர வெங்காயம் வதங்கி வரும் பொழுது தக்காளி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி துண்டுகளை பொடியாக நறுக்க வேண்டாம். பெரிது பெரிதாக நறுக்கி வையுங்கள். இப்போது இவை வதங்க தேவையான அளவிற்கு உப்பு போட்டு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மசிய வதக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இனி ஆம்லெட் சாப்பிடணும் ஆசைப்பட்டா முட்டை வாங்கணும்னு அவசியமே இல்ல, இதோ இப்படி முட்டை இல்லாமலே வகை வகையா ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் வாங்க.

பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கைப்பிடிக்கும் குறைவாக புதினா இலைகளை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த காரச் சட்னியுடன் ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிக்க நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை, காஞ்ச மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்த பின்பு அரைத்த சட்னியை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். எண்ணெயின் சூட்டிலேயே சட்னி வதங்க வேண்டும். அப்பொழுதுதான் செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான கார சட்னி தயாராக இருக்கும். அவ்வளவுதான், இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் இது ரொம்பவே பிடித்து போய்விடும்.

- Advertisement -