எக்லெஸ் ஆம்லெட் செய்வது எப்படி
ஆம்லெட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? அதற்காக நாம் தினமும் முட்டை வாங்கி செய்து கொண்டிருக்க முடியுமா என்றால் அதுவும் கொஞ்சம் கஷ்டம் தான். முட்டை சேர்க்காமல் அதற்கு பதிலாக அதே சுவையில் காலை வேளையில் நல்ல ஒரு காலை நேர ஆக உணவாக இந்த எக்லெஸ் ஆம்லெட் தயார் செய்து சாப்பிட முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்படி ஆம்லெட் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள், அது மட்டும் இல்லாமல் பெரியவர்கள் சிலரில் முட்டை சேர்த்துக் கொள்ள கூடாது என்கிற பிரச்சனை இருக்கும், அப்படிப்பட்டவர்களுக்கு கூட ஆம்லெட்ட சாப்பிட ஆசைப்பட்டால் இப்படி செய்து சாப்பிடலாம். வாங்க இந்த எக்லெஸ் பிரட் ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எக்லெஸ் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப், மைதா -1 டேபிள் ஸ்பூன், சமையல் சோடா – 1/2 டீஸ்பூன், சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2, இஞ்சி – 1 துண்டு, குடைமிளகாய் -1, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், வெங்காயம் – 1,தக்காளி -1, கொத்து மல்லி – கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கொத்து, வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன், பிரட் – 4 துண்டு.
இந்த ஆம்லெட் செய்வதற்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் நல்ல பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதையே குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வேறு காய்கறிகளையும் கூட பொடியாக நறுக்கி இதில் சேர்த்து செய்து கொடுக்கலாம்.
எக்லெஸ் ஆம்லெட் செய்முறை
ஒரு பௌலில் கடலை மாவு, மைதா மாவு, சமையல் சோடா, மிளகுத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து விட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, குடை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவைகளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்து விடுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து சூடான உடன், அதில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்த பிறகு கரைத்து வைத்த மாவை ஊற்றி பரவலாக எல்லா பக்கமும் வரும்படி பரப்பி விடுங்கள். அதன் மேல் இந்த பிரட்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மேலே வைத்து அப்படியே ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள். சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான எக்லெஸ் பிரெட் ஆம்லெட் தயார்.
இதையே இன்னொரு முறையிலும் செய்யலாம், கலந்து வைத்த மாவில் பிரட்டை நனைத்து அப்படியே எடுத்து தோசை கல்லில் போட்டு வெண்ணையை சுற்றிலும் தேய்த்து, இரண்டு புறமும் திருப்பி போட்டும் செய்யலாம். இந்த முறையிலும் செய்தாலும் இது நன்றாகவே இருக்கும். பிரட் இல்லை என்றாலும் கூட இந்த மாவை மட்டும் வெண்ணெய் தேய்த்த பிறகு கொஞ்சம் தடிமனாக ஊற்றி சாப்பிட்டால், அப்படியே ஆம்லெட்டின் சுவையிலே இருக்கும். நீங்களும் இந்த ஆம்லெட் ரெசிபியை செய்து பாருங்கள் இதன் சுவைஉங்களுக்கும் பிடிக்கும்.
இதையும் படிக்கலாமே: 2 கப் அரிசி மாவு இருந்தால் தேங்காய் பூரி ஈசியாக சுவையாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, வீட்டில் எல்லோரும் திரும்பத் திரும்ப செய்ய சொல்லுவாங்க!
ஆம்லெட் என்றாலே முட்டை ஊற்றி தான் செய்ய வேண்டும் என்று இல்லை, முட்டை இல்லாமலே கூட இப்படி வகை வகையா ஆம்லெட் சாப்பிடலாம். இதில் உங்களுக்கு எந்த வகை ஆம்லெட் பிடித்திருக்கிதோ அதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.