- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெவ்வாய்க்கிழமை அமாவாசை அம்மன் பரிகாரம்

செவ்வாய்க்கிழமை அமாவாசை அம்மன் பரிகாரம்

- Advertisement -

ஆனி மாதம் அமாவாசை இரண்டு நாட்கள் பிரிந்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை 24-6-2025, இன்று மாலை 6:57 மணி அளவில் அமாவாசை திதி பிறக்கவிருக்கிறது. அடுத்த நாள் புதன்கிழமை 25ஆம் தேதி மாலை 5:00 மணி வரை தான், அமாவாசை திதி இருக்கிறது. ஆகவே அம்பாள் கோவிலில், இரவு நேரத்தில் செய்யக்கூடிய அமாவாசை வழிபாட்டு முறைகளை, செவ்வாய் கிழமை மாலை நேரத்தில் வைத்துக் கொள்வார்கள்.

முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் படையல் போடக்கூடிய காரியங்களை, 25ஆம் தேதி புதன்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் செவ்வாய்க்கிழமை இரவே நமக்கு அமாவாசை திதி பிறந்து விடுகிறது, செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பிறந்திருக்கும் இந்த அமாவாசை திதி, நம்மை காக்கும் அம்பாள் ஆதிபராசக்திக்கு உரியது. இந்த நேரத்தில் உக்கிர அம்மன் தெய்வங்களை வழிபாடு செய்தால் அதி சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.

- Advertisement -

குடும்பத்தில் தீராத கண் திருஷ்டி, உடல் உபாதைகள், கெட்ட சக்தியின் ஆதிக்கம், ஏவல் பில்லி சூனியம் செய்வினை இவைகள் எல்லாம், தலைவிரித்து ஆடுகிறது என்றால், செவ்வாய்க்கிழமை இரவு பிறக்கும் அமாவாசையில் அம்பாள் வழிபாடு செய்வது ஒன்று மட்டும்தான் நல்ல தீர்வு. ஆகவே இந்த நாளை தவற விடாதிங்க. இந்த நேரத்தில் உக்கிர தெய்வ வழிபாட்டை கோவிலுக்கு சென்று எப்படி மேற்கொள்வது. ஆன்மீகம் சார்ந்த சில தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

இன்று மாலை 7 மணிக்கு மேல் உங்கள் வீட்டு பக்கத்தில் அங்காள பரமேஸ்வரி, பிரத்தியங்கிரா, மகாபத்ரகாளி, வாராஹி இதுபோல எந்த தெய்வங்களின் கோவில்கள் இருந்தாலும் சரி, அந்த இடத்திற்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அமாவாசை இரவு அம்மன் கோவில் வாசலை மிதித்தாலே நம் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகிவிடும். எந்த உக்கிரமமாக இருந்தாலும் சரி, அமாவாசை நாளில் அந்த அம்மனுக்கு பவர் அதிகமாக இருக்கும். உக்கிரமான இதுபோல அம்மன் கோவில் உங்கள் ஊரில் இல்லை என்றால், உங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கும் செல்லலாம். தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

ஒரு எலுமிச்சம் பழம், அம்மனுக்கு பூ வெற்றிலை பாக்கு வாழை பழம், தேங்காய் அர்ச்சனைக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள். அமாவாசை இரவு அம்மன் கோவிலுக்கு செல்லவும். கோவிலிலேயே அமருங்கள். உள்ளங்கைகளில் அந்த எலுமிச்சம்பழத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு 10 நிமிடம் மனதார அம்மனை தியானம் செய்து, உங்களிடம் இருக்கும் பிரச்சனைகளை அம்மனிடம் சொல்லி, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று, வேண்டி அந்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சகர் இடம் கொடுத்து, குடும்ப உறுப்பினர்களின் பெயரை சொல்லி, அர்ச்சனை செய்து, அம்பாள் பாதத்தில் வைத்து எடுத்து கொடுக்கச் சொல்லுங்கள். மீண்டும் அந்த பழத்தை வாங்கி நேராக உங்கள் வீட்டிற்கு வந்து, பூஜையறையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு மாதத்திற்கு அந்த பழம் அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் பாதுகாப்பாக இருக்கட்டும். உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி கெட்ட சக்தியை துரத்தி அடிக்க இந்த பழம் உதவி புரியும். அதி சக்தி வாய்ந்த அமாவாசை இரவில், நீங்கள் எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு, அம்பாளை வேண்டினால் அம்பாளின் சக்தி முழுவதும் அந்த எலுமிச்சம் பழத்தில் அடங்கிவிடும். அதை கொண்டு வந்து வீட்டில் வைக்கும்போது, வீட்டில் இருக்கும் துர்சக்திகள் தானாக வெளியேறிவிடும்.

இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரி 2025

இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் மகிமை. அதேபோல திருஷ்டி சுற்றி போட வேண்டும் என்றால் இந்த செவ்வாய்க்கிழமை இரவே திருஷ்டியை சுற்றி போடலாம். அமாவாசை இரவு ஆனது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது அதிசிறப்பு. யாரும் இந்த நேரத்தை தவற விடாதீர்கள். உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றலில் இருந்து விலகி நிற்க இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. நம்பிக்கை உள்ளவர்கள் தேவைப்படுபவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்