உங்களுக்கு பூமி மனை லாபம் ஏற்பட இந்த மந்திரம் துதியுங்கள்

sevvai

இந்த உலகத்தில் எந்த ஒரு உயிருக்குமே அது இருக்கும் இடத்திலேயே அது வாழ்வதற்கான அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. மனிதர்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு தைரியமும், திட நம்பிக்கையும் வேண்டும். இதை ஓவருவருக்கு தருபவராக செவ்வாய் பகவான் இருக்கிறார். மேலும் திருமண தடை நீங்கவும், பூமி லாபம் தரும் கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். அவருக்குரிய “செவ்வாய் பகவான் ஸ்லோகம்” இதோ.

sevvai

செவ்வாய் பகவான் ஸ்லோகம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

chevvai bagwan

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

- Advertisement -

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

நவகிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை துதித்து வருவது சிறந்தது. மேலும் செவ்வாய்கிழமைகள் மற்றும் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய சஷ்டி தினங்களில் இந்த ஸ்லோகத்தை நவகிரக சந்நிதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி ஸ்லோகத்தை 27 முதல் 108 முறை வரை மனதார துதித்து வருவதால் செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடை, தாமதம் போன்றவை நீங்கும். பூர்வீக சொத்து, பூமி மனை லாபங்கள் ஏற்படும்.

chevvai bagavan

மனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம், உடல் மனதிடம், போட்டிகளில் வெற்றி, மேலான பேராண்மை குணம் ஆகியவற்றை ஒரு மனிதனுக்கு தரும் நவகிரக நாயகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த செவ்வாய் பகவானின் அம்சமாக சண்முகர் ஆகிய முருக பெருமான் இருக்கிறார். மேற்கண்ட ஸ்லோகத்தை செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை நினைத்து துதித்து வருவதால் நமக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
வறுமை நிலையை தடுக்கும் ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chevvai bhagavan slokam in Tamil. It is also called as Sevvai bhagavan mantra in Tamil or Sevvai thosam manthiram in Tamil or Angaraka mantra in Tamil.