உங்கள் வீட்டில் வறுமை நிலை ஏற்படாமல் செய்யும் ஸ்தோத்திரம் இதோ

vinayagar

ஒவ்வொருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் அவசியமாக இருக்கிறது. சிலரின் வாழ்வில் கல்வி செல்வம் அதிகம் இருந்தால் பொருட்செல்வம் இருப்பதில்லை, பொருட்செல்வம் அதிகமிருந்தால் கல்வி செல்வம் இருப்பதில்லை. இந்த இரண்டையும் தருபவர் விநாயகர் பெருமான் அவரை வழிபடுவதற்குரிய ஏகதந்த ஸ்தோத்திரம் இதோ.

vinayagar

ஏகதந்த ஸ்தோத்திரம்

லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம்
குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்தகாப்யாம் ஸலட்டுகம்
தந்தமத கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே

Vinayagar

ஏகதந்தம் கொண்ட யானைமுகனாகிய விநாயக பெருமானை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் துதிப்பதால் அன்றைய தினம் முழுவதும் வெற்றிகரமாக இருக்கும். புதன் கிழமைகள் மற்றும் மாதத்தில் வரும் சதுர்த்தி தினங்களில், விநாயகருக்கு தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை கூறி துதிப்பதால் உங்கள் வீட்டு குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். வீட்டில் வறுமை நிலை ஏற்படாது. காரியங்கள் தொடங்கும் முன்பு இந்த ஸ்தோத்திரம் துதித்து தொடங்கினால் அக்காரியங்கள் சிறந்த முறையில் வெற்றி பெறும்.

Vinayagar

- Advertisement -

நமது சாஸ்திரங்களில் யானை தெய்வீக சக்திகள் அதிகம் கொண்ட அற்புதமான ஒரு விலங்கு ஆகும். யானையின் சிறப்பே அதன் தந்தங்கள் தான். அந்த யானையின் தலையை கொண்ட கரிமுகனாகிய விநாயக பெருமான் தனது இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைத்து தீய சக்திகளை அழித்தும், வேத வியாசர் மகாபாரத காவியத்தை கூற அந்த தந்ததை கொண்டே அக்காவியத்தை எழுதினார் விநாயகர் பெருமான். அவரின் இம்மந்திரத்தை துதிப்பதால் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
கிரக தோஷம், நோய்கள் நீக்கும் மந்திரம் இதோ

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ekadanta stotram in Tamil. It is also called as Vinayagar mantras in Tamil or Vinayagar manthirangal in Tamil or Pillaiyar thuthi in Tamil or Vinayagar thuthi in Tamil.