- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர செவ்வாய் பகவானின் மந்திரம்

கடன் தீர செவ்வாய் பகவானின் மந்திரம்

- Advertisement -

கடன் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய நாள் என்றால் அது செவ்வாய்க்கிழமை தான். கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி விட்டாலே உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக குறைந்து விடும். நிம்மதியாக தூக்கம் கூட வராமல், கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் கை கொடுக்கும்.

கடன் தீர்க்கும் செவ்வாய் மந்திரம்

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடவும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி முருகப் பெருமானையும் குலதெய்வத்தையும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வழக்கம்போல பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். உங்கள் பக்கத்தில் வாசம் நிறைந்த ஊதுவத்தியையும் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையிலும் இடது கையிலும் நிரம்பக் கல்லுப்பு எடுத்துக் கொள்ளவும். கல் உப்பு கடனை குறைக்க உகந்த ஒரு பொருள். மகாலட்சுமிக்கு சொந்தமான ஒரு பொருள்.

- Advertisement -

சம்மணம் போட்டு முதுக தண்டுவடம் நேராக இருக்கும் படி அமர்ந்து கொள்ளுங்கள். தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலிகளும் அமர்ந்து கொள்ளலாம். செவ்வாய் பகவானை மனதார நினைத்து என்னுடைய கடன் கரைந்து போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ‘ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்லுங்கள்.

நவகிரகங்களில் இது செவ்வாய் பகவானுக்கு உரிய மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை எண்ணிக்கை கணக்கு வைத்துக்கொள்ள வேண்டாம். 5 நிமிடங்கள், 7 நிமிடங்கள் உங்களுடைய சவுகரியத்திற்கு ஏற்ப இந்த மந்திரத்தை மட்டும் முழு மூச்சோடு நம்பிக்கையோடு உச்சரித்தால் போதும். மந்திரத்தை உச்சரித்துவிட்டு கையில் இருக்கும் உப்பை சுத்தமான தண்ணீரில் கரைக்க வேண்டும்.

- Advertisement -

பூஜைக்கு தயாராகி உட்காரும்போதே ஒரு சுத்தமான பாத்திரத்தில் குடிக்கின்ற தண்ணீரை எடுத்து வைத்துக் கொண்டு உட்காருங்கள். பூஜையை முடித்துவிட்டு இந்த கல்லுப்பை உங்கள் கையாலேயே அந்த தண்ணீரில் நன்றாக கரைத்து விட வேண்டும். இந்த தண்ணீரை கொண்டு போய் சிங்கிள் கொட்டி விடுங்கள். அவ்வளவு தான்.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து 48 வாரங்கள் செல்கிறாரோ, அவருக்கு கடன் சுமை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும். அதற்கு மேலும் இந்த பரிகாரத்தை தொடரலாம் தவறு கிடையாது. ஆனால் இந்த 48 வாரங்களில் நிச்சயமாக உங்கள் கடன் சுமை குறைய ஒரு வாய்ப்பை அந்த கடவுள் ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் ஜீவராசிகள்

என்னுடைய கடன் தொகை ரொம்ப ரொம்ப பெருசு. என்னுடைய சக்திக்கு மீறி கடன் வாங்கி விட்டேன் என்று சொல்லுபவர்கள் மட்டும் இந்த படிகாரத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் நாட்கள் செய்ய வேண்டியதாக இருக்கும். இந்த மந்திர நாம ஜெபத்தோடு சேர்ந்து, கடனை திருப்பித் தர முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளில் எந்த ஒரு தடையும் வராமல் இருப்பதற்கு இந்த மந்திரங்கள் உங்களுக்கு வழி வகுக்கும். நல்லதை நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்