- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீய சக்திகள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் ஜீவராசிகள்

தீய சக்திகள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் ஜீவராசிகள்

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாயில்லா ஜீவன்கள் என்று சொல்லக்கூடிய அனைத்திற்கும் உதாரணமாக கிளி, புறா, சிட்டுக்குருவி, அணில், நாய், பூனை, மாடு, ஆடு, கோழி போன்ற அனைத்திற்கும் எது தெய்வ சக்தி எது தீய சக்தி என்பதை அறிந்து கொள்ளும் தன்மை இருக்கிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இது போன்ற வாயில்லா ஜீவன்களை தங்கள் வீட்டில் வைத்து வளர்த்தனர். ஏதாவது தீய சக்தி வீட்டிற்குள் வருவதாக இருக்கும் பட்சத்தில் முதலில் தன்னுடைய உயிரை மாய்த்து நமக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும். அப்படிப்பட்ட ஜீவராசிகள் நம் வீட்டிற்கு வருவதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தீய சக்திகள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் ஜீவராசிகள்

புறா குருவி அணில் போன்ற ஜீவன்கள் தான் வீட்டில் அதிகம் கூடு கட்டி வாழும் உயிரினங்கள். இவைகளிடம் மனிதனை விட அதிக அளவு ஜீவசக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இவைகளுக்கு தெய்வீக ஆற்றலையும் அறியும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் தான் இது போன்ற உயிரினங்கள் இல்லத்தில் இருப்பது மனிதனுக்கு நன்மையை அளிக்கும். தீய சக்திகள் நம் இல்லத்தில் இருந்தால் இந்த உயிரினங்கள் அங்கு தாங்காது. இது ஒரு நல்ல அறிகுறியாக தான் இருக்கும். எனவே புறா அணில் குருவி போன்ற உயிரினங்கள் உங்கள் இல்லங்களில் கூடு கட்டி இருந்தால் அதை கலைக்காதீர்கள்.

- Advertisement -

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் வீட்டு வாசலில் நெற்கதிர்களை சொருகி வைப்பார்கள். ஏனெனில் இது போன்ற பறவை உயிரினங்கள் அவற்றை உண்டு அங்கே தங்கி அந்த இல்லத்திற்கு அதிர்ஷ்டத்தை தரவல்லது என்று அவர்கள் நம்பி இருந்ததே காரணம். மேலும் நாம் புதிதாக கட்டிய இல்லத்தில் பறவை இனங்களை வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இதனால் நம் இல்லம் முழுவதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்கும்.

மேலும் தீவினைகள் நம்மை நெருங்காது. எவ்வளவோ செலவழித்து வாஸ்து பார்த்து புதிய இல்லத்தை கட்டியிருப்பார்கள். ஆகையால் இது போன்ற ஜீவன்களின் கூட்டை கலைத்து அந்த பாவத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பில்லி சூனியம் ஏவல் போன்ற செய்வினைகள் யாராவது செய்திருந்தால் அந்த இல்லத்தில் இருக்கும் உயிரினங்களுக்கு தான் முதலில் பாதிப்பு இருக்கும். அதை வைத்து நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். பறவைகள் என்று இல்லை, நாம் வளர்க்கும் நாய், பூனை, கோழி, கிளி போன்ற செல்லப்பிராணிகள் கெட்ட சக்திகளிடமிருந்து உங்களை காப்பாற்றும் வல்லமை பெற்றது.

- Advertisement -

சிட்டுக்குருவிகள் நம் இல்லத்தில் கூடு கட்டுவது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம் தான். இல்லத்தில் பறவைகள் கூட கட்டினால் மங்கலம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் சிட்டுக்குருவிகள் நம் இல்லத்தை தேடி வந்து கூடு கட்டினால் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும்.

இல்லத்தில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் உங்களுடைய துரதிஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறிவிடுமாம். அதுமட்டுமின்றி இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் உங்களுடைய இல்லத்தில் புறா கூடு கட்டினால் பணவரவு தாராளமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் புறா மகாலட்சுமியின் பக்தராக சொல்லப்படுகிறது.

- Advertisement -

உங்களுடைய இல்லத்தில் தென் திசையில் குருவிக்கூடு கட்டுவது பொருளாதாரத்தை மேம்பாடு அடைய செய்யும். தென்மேற்கு திசையில் குருவிக்கூடு கட்டுவது குடும்ப உறுப்பினர்களிடையே ஆயுளை அதிகரிக்கும். மேலும் நிதிநிலை உயர்வதோடு தொழிலில் கணிசமான லாபமும் கிடைக்க பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே :உப்பை எப்படி வாங்கணும்? எப்படி வாங்க கூடாது?

மனிதாபிமான அடிப்படையில் வாயில்லா ஜீவன்களை கட்டிப்போட்டு வளர்க்காமல் சுதந்திரமாக நம்மால் இயன்ற அளவு உணவை அளிப்பதன் மூலம் அளப்பரியா பலனை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்