கடன் தீர செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

pillaiyar6
- Advertisement -

சாதாரணமாக வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தாலே சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதிலும் நாளை செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி வரவிருக்கின்றது. இதனை ருணம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவார்கள். ருணம் என்றால் கடன் என்ற பொருளையும் குறிக்கின்றது. கடனை போக்குவதற்கு நாளைய தினம் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

நாளைய தினம் பெண்கள் ஆண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக தலைக்கு குளித்து விடுங்கள். பூஜை அறையில் விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு இந்த விரதத்தை தொடங்க வேண்டும். காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வேண்டுதலை முடித்து விட வேண்டும்.

- Advertisement -

கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து இருக்க மூடி கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ, அதை பிள்ளையாரிடம் சொல்லி அந்த கடன் சுமை எனக்கு படிப்படியாக குறைய வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும், என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை உங்க வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரது பாதத்தில் வைக்கவும். ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வச்சிருங்க.

பிறகு நீங்கள் விரதத்தை தொடங்கலாம். முடியும் என்பவர்கள் எதுவுமே சாப்பிடாமல் உபவாசம் இருங்கள். முடியாது என்பவர்கள் அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்து உணவு சாப்பிட்டுக் கொள்ளுங்கள். தவறு கிடையாது. இந்த வேண்டுதலை முடித்துவிட்டு காலையில் உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கவும்.

- Advertisement -

மாலை 6:30 மணிக்கு மேல் தான் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டிற்கு சிறப்பு. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெற்றிலையில் ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு அருகம்புல் வைத்து, பூ வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வழிபாடு செய்யும்போது கடன் சுமை குறைய வேண்டும் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும். வருமானத்தை பெருக்கிக் கொள்ள லட்சுமி கணபதி மந்திரத்தை சொல்லலாம்.

லட்சுமி கணபதி மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய
கணபதயே வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா!

- Advertisement -

இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு பூஜை அறையில் காலையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்தீர்கள் அல்லவா. அதை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றுங்கள். பிறகு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து ஏற்ற இறக்கமாக மூன்று முறை எலுமிச்சம் பழத்தை ஏற்றி இறக்கி, இந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி வீட்டிற்கு வெளியே வந்து நான்கு திசைகளிலும் வீசிவிடலாம். சில பேருக்கு வெளியில் இதை நான்கு திசைகளில் வீசுவதற்கு இடம் இருக்காது.

அப்படிப்பட்டவர்கள் நான்கு துண்டுகளாக இந்த எலுமிச்சம் பழத்தை அறுத்து ஒரு பேப்பரில் மடித்து குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். வீட்டிற்கு உள்ளே இந்த எலுமிச்சம் பழம் இருக்கக் கூடாது. நிலை வாசல் படிக்கும் வெளியில் இந்த எலுமிச்சம் பழத்தை வச்சிருங்க அவ்வளவுதான். பரிகாரம் முடிந்தது. கடனை அடைக்க எந்த தடை வந்தாலும் அதை அந்த விநாயகர் பார்த்துக் கொள்வார் நீங்க பாட்டுக்கு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக வெட்டி வேர் பரிகாரம்

நாளைய தினம் அனைவரும் கட்டாயமாக வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைத்து விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடையுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -