- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெவ்வாய்க்கிழமை வாராகி வழிபாடு

செவ்வாய்க்கிழமை வாராகி வழிபாடு

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு சிறப்பு வாய்ந்த நாள் என்று சொல்லலாம். அதிலும் தற்போது எல்லாரும் வாராகி வழிபாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. வாராஹி வழிபாடு செய்பவர்கள் என்றும் தர்மத்தின் பாதையில் தான் பயணிக்க வேண்டும்.

உங்களை அறியாமல் நீங்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து விட்டால் வாராகி வழிபாடு உங்களுக்கும் தண்டனையை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தவறு செய்தால் வாராஹியிடம் தண்டனை உண்டு. ஏனென்றால் வாராகியின் தத்துவம் அது தான். எதிரிகளை வீழ்த்துவது தான் அவள் வேலை. உங்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்களை தண்டித்து விடுவாள்.

- Advertisement -

நீங்கள் யாருக்காவது எதிராக செயல்பட்டால் வாராஹி உங்களையும் தண்டிப்பாள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக வாராஹி வழிபாடு செய்ய கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். வாராஹி வழிபாடு செய்யலாம் அதற்கான விதிமுறைகளோடு வராஹி வழிபாடு செய்வது நல்லது.

வீட்டு பக்கத்தில் வராகியின் சன்னிதானத்தோடு ஒரு கோவில் இருக்கிறது என்றால், அந்த கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை வாராகிக்கு ஒரு விளக்கு போட்டு வாராகி மூன்று முறை வலம் வந்து வழிபடலாம். இப்படி கோவிலுக்கு செல்லும்போது அவளுக்கு கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய சாக்லேட் வாங்கிக் கொண்டு போய் வைத்து நெய்வேதியம் செய்துவிட்டு குருக்களிடம் மீண்டும் அந்த சாக்லேட்டை நீங்கள் வாங்கி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கருப்பு நிற இனிப்பு பொருளை வாராஹித் தாய்க்கு பிரசாதமாக கொடுத்து வழிபாடு செய்யும்போது நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் விரைவில் விளக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதை நீங்கள் பரிகாரத்திற்காக செய்யவில்லை, கர்ம வினை கழிய வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. நான் வாராஹி கோவிலுக்கு தான் செல்கின்றேன் என்று அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லக்கூடாது.

வாராகி அம்மனுக்கு பிடித்த இந்த ஒரு பொருளை பாசத்தோடு வாங்கிக் கொண்டு போய் கோவிலில் கொடுக்குறீங்க. அதை வாராகிதாய் விரும்பி சாப்பிடுவாள் என்று நம்புறீங்க. தாயின் ஆசிர்வாதம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். இவ்வளவுதான் வழிப்பாடு. தவிர உங்களுடைய பாவங்கள் தீரவோ கர்ம வினைகள் கழியவோ இந்த பரிகாரத்தை செய்யவில்லை. மனநிறைவோடு வாராகியின் மனதை குளிர வைக்க வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகன் வழிபாடு

இரண்டு அல்லது மூன்று வார செவ்வாய்க்கிழமை இதை செய்து பாருங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். எதிரி பிரச்சனை இருக்காது, டென்ஷன் இருக்காது, வாழ்க்கையில் கஷ்டங்கள் நம்மை பின் தொடராது, கண் திருஷ்டி விழாது, ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல் நம்மை நெருங்காது. நல்லதே நடக்கும். வராகியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்