முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு தினம் தினம் நல்ல நாள் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முழு மனதோடு முருகனை நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட்டதில்லை. அந்த வகையில் உங்களுடைய செல்வ செழிப்பு உயர்வும், காரியத்தடை விலகவும் விபத்துக்கள் நேராமல் இருக்கவும் தினம் தினம் வெற்றி உங்களை தொடரவும், செய்ய வேண்டிய ஒரு சில ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த வழிபாடுகள் அனைத்துமே மிக மிக சக்தி வாய்ந்தது. அன்றாட வாழ்க்கையில் உங்களை ஒவ்வொரு நாளும் முன்னுக்கு கொண்டு செல்லும் வேலையை இந்த மந்திர வார்த்தைகள் செய்யும். அது என்னென்ன பரிகாரம், என்னென்ன மந்திர வார்த்தை, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வாழ்க்கையில் தினம் தினம் நல்லது நடக்க பரிகாரங்கள்
இப்போது நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் குரு செவ்வாய் சேர்க்கைக்கான காலகட்டம். செவ்வாயும் குருவும் இணையும் போது திருச்செந்தூர் முருகனை மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. வரக்கூடிய மூன்று மாதங்கள், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் திருச்செந்தூர் முருகப்பெருமானை வீட்டில் இருந்தபடியே மனதில் நினைத்துக் கொண்டு, ‘கருணை கடலே கந்தா போற்றி’ என்ற மந்திரத்தை உங்களால் முடிந்த வரை உச்சரியுங்கள்.
திருச்செந்தூர் முருகனை மனதோடு நினைத்துக் கொண்டே இருங்கள். நிச்சயம் உங்களுடைய பண பிரச்சனைகள் தீர்ந்து, அந்த கந்தபிரானின் கருணை கிடைத்து, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். முடிந்தால் வரக்கூடிய மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் ஒரு முறை திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்யலாம். முடிந்தவர்கள் மட்டும் இதை செய்யுங்கள். கட்டாயம் செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.
அதேபோலத்தான், செல்லும் காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று, தினம் தினம் எண்ணிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்புவோம். ஆனால் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையாது. செல்லும் காரியம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், தினமும் காலையில் எழுந்து ‘கேசவா கேசவா’ என்று சொல்லுங்கள். ‘ஓம் ஹரயே ஓம்’ என்று சொல்லுங்கள் உங்கள் காரிய தடை விலகும் செல்லும் காரியம் நல்லபடியாக நடக்கும்.
நாளை உங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான வேலை இருக்கிறது என்னும்போது, இன்று உங்க வீட்டு பக்கத்தில் ஆலமரம் எங்கு இருக்கிறது என்று பாருங்கள். நாளைக்கு நடக்கப்போகும் நல்ல காரியம் உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். நாளை எந்த காரியத்த தடையும் வரக்கூடாது என்று, நினைத்துக் கொண்டு ஒரு வாட்டர் கேனில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக்கொண்டு செல்லவும்.
அந்த அரச மரத்திற்கு இந்த மஞ்சள் தண்ணீரை ஊற்றிவிட்டு அரச மரத்திடம் சொல்லுங்கள். நாளைக்கு இதுபோல எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, என்ன வேலையோ அதை அரசமரத்திடம் சொல்லலாம் தவறு கிடையாது. அந்த வேலையை நீ எனக்கு சரியாக முடித்துக் கொடுத்துவிடு, நாளைக்கு வந்து நான் உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று சொல்லி அரச மரத்திடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்த நாள் நீங்கள் நினைத்த வேலை நல்லபடியாக நிச்சயம் நடந்து முடியும். காரிய தடை எதுவும் வராது. உங்களுக்கு சாதகமாக அந்த வேலை நடந்து முடிந்த பின்பு, அரச மரத்தை மீண்டும் சந்தித்து, மீண்டும் மஞ்சள் தண்ணீரை ஊற்றி, அந்த மரத்திற்கு நன்றியை தெரிவித்து விட்டு வரவும். இதை செய்பவர்களுக்கு நிச்சயம் காரியத்தடை வராது.
இதையும் படிக்கலாமே: முருகனின் அருள் பெற மந்திரம்
நீங்கள் செல்லக்கூடிய காரியம் நல்லபடியாக நடக்கும். மேலே சொன்ன இந்த எளிமையான பரிகாரங்களில் உங்களால் எது முடியுமோ அதை செய்து பலன் பெறுங்கள். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு ஏமாற்றம் இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.