குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

child
- Advertisement -

“குழந்தையும், தெய்வமும் ஒன்று” என்ற பழமொழி முற்றிலும் உண்மை. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைத்த பிறகே இல்லற வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறுகிறது. உடல் மற்றும் மன குறைபாடுகளில்லாத ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்பதே அனைவரின் விரும்பகமாக இருக்கும். ஆனால் ஒரு சில பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல், மன ரீதியான குறைபாடுகள் இல்லையென்றாலும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு அக்குழந்தையும், அக்குழந்தைகளின் பெற்றோர்களும் வேதனைபடும் சூழல் உண்டாகிறது. இத்தகைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

baby

நாம் செய்யும் நன்மை மற்றும் தீமைகளுக்கான வினைப்பயன்கள் நமது எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பது இந்து மத வேத நூல்கள் கூறும் யதார்த்த உண்மையாகும். எனவே நமது குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு பிறகான சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு எத்தகைய தீமையான காரியங்கள் செய்யாமலிலிருப்பதே சிறந்தது. இதற்கு பதிலாக புண்ணியம் தரும் காரியங்களை செய்வது நமது குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் சிறந்த பரிகாரம் ஆகும். தங்களின் குழந்தைகளை நோய்கள் அண்டாமல் இருக்கவும், உடல்நலம் மேம்படவும் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குழந்தைகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சந்தானலட்சுமியின் படத்தை வைத்து வாசனை மிகுந்த பூக்களை சூட்டி, தூபங்கள் கொளுத்தி சாந்தலட்சுமிக்குரிய மந்திரங்களை கூறி வழிபட்டு வர வேண்டும். நவகிரகங்களில் புத்திரன் எனப்படும் குழந்தை பேறு அருளும் நாயகனாக “குருபகவான்” இருக்கிறார். வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நூலில் 27 கொண்டைக்கடலைகள் கோர்த்த மாலையை குருபகவானுக்கு சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி வருவதால் குழந்தைகள் உடல்நலம் தேற பெற்று நீண்ட ஆயுளை பெற குரு பகவான் அருள்புரிவார். பாலமுருகனாக முருகன் வீற்றிருக்கும் கோயில்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபடுவதால் உடல்நலம் குன்றிய குழந்தைகள் முருகனின் அருளால் சீக்கிரம் உடல்நலம் தேறப்பெறுவார்கள்.

guru bagwan

குழந்தை பிறந்து 5 வயது வரை வெள்ளி கிண்ணத்தில் பால் அருந்துமாறு செய்து வருவது குழந்தையின் உடலாரோக்கியதை மேம்படுத்தும். திங்கட்கிழமைகளில் சிவன் கோயில்களில் பாலாபிஷேகத்திற்கான பாலை உங்கள் குழந்தைகள் கையால் கோயிலுக்கு தானமாக கொடுக்க செய்ய வேண்டும். அக்கோயில்களில் இருக்கும் பசுமாடுகள் அல்லது வீட்டில் இருக்கும் பசுமாடுகளுக்கு உங்கள் குழந்தைகளின் கைகளால் வாழைப்பழங்கள், அகத்திகீரைகள் போன்றவற்றை கொடுக்க செய்ய வேண்டும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாதந்தோறும் வரும் அமாவாசை அன்றும் குழந்தைகளுக்கு கட்டாயம் திருஷ்டி கழித்து போட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சிம்ம ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Child health pariharam in Tamil. It is also called Kulanthai udal nalam in Tamil or Kulanthai noikal neenga in Tamil or Child health remedies in Tamil or Balamurugan koil in Tamil.

- Advertisement -