சிம்மம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

simma-rasi

ஜோதிடத்தில் பல வகைகள் இருந்தாலும் ஜாதகத்தை கொண்டு கூறப்படும் ஜோதிட முறையில் தான் பெருமளவிற்கு துல்லியமான பலன்களை கூற முடிகிறது. எனவே ஜாதகத்தை எழுந்தும் போது பிறந்த நபரின் ராசி முக்கியமாக தெரிந்து கொள்வது அவசியமாகும். மொத்தமுள்ள 12 ராசிகளில் ஐந்தாவது ராசியாக வருவது “சிம்மம்” எனப்படும் “சிம்ம ராசி”. இந்த சிம்ம ராசி குறித்தும், இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம் என்கிற சொல் சிங்கத்தை குறிக்கிறது. இந்த ராசி சூரிய பகவானின் சொந்த ராசியாக இருக்கிறது. ராசியின் பெயருக்கு ஏற்றார் போலவே எதிரிகளை நடுங்க செய்யும் தோரணையும், குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள். மற்ற எந்த ஒரு ராசிக்காரர் மீதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு விஷேஷ சக்தி சிம்ம ராசிக்காரர்களுக்கே உரிய ஒரு வரமாகும். சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பல நன்மைகளை தங்கள் வாழ்வில் பெற செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிக சிறந்த நன்மைகள் பெறுவதற்கும் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்படவும் வருடத்திற்கு ஒரு முறை கும்பகோணத்தில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபடுவது நல்லது. தினமும் அதிகாலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வதும், உங்கள் தந்தை மற்றும் உங்களுக்கு பணியிடங்களில் இருக்கும் உயரதிகாரிகளுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்வது உங்களுக்கு சூரிய பகவானின் பூரண அருளாசிகளை பெற்று தரும். தரமான “மாணிக்கம்” கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும்.

Lord sooriyan

ஞாயிற்றுக்கிழமைகளில் பசுமாடுகளுக்கு கொஞ்சம் ஊறவைத்த கோதுமையை வெல்லம் கலந்து உண்ண கொடுப்பது சூரியனுக்குரிய ஒரு சிறந்த பரிகாரமாகும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் இருப்பவர்கள் 48 நாள் அல்லது ஒரு மண்டலம் சிறிது வெல்லத்தை ஓடும் ஆற்று நீரில் கரைப்பதால் உங்கள் தோஷங்களும் கரைவதாக ஐதீகம். தினந்தோறும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது கோயிலில் அல்லது வேறெங்கேனும் இருக்கும் அரச மரத்திற்கும் சில துளிகள் பசுப்பால் கலந்த நீரை அம்மரத்தின் வேருக்கு ஊற்றி வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கடக ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Simha rasi pariharam in Tamil. Simha rasi kal and benefits in Tamil