குழந்தையோடு விளையாடும் நாகம் – வீடியோ

snake with baby

பாம்புகள் என்றாலே அனைவருக்கும் ஒரு வித அச்சம் இருக்கும். இதனால் தான் என்னவோ பாம்பு என்று படையும் நடுங்கும் என்று கூறி சென்றனர் நம் முன்னோர்கள். அப்படி அனைவரையும் நடு நடுங்க வைக்கும் நாக பாம்புடன் ஒரு சிறு குழந்தை விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதோ அதன் காட்சி.

இது விஷம் நீக்கப்பட்ட பாம்பா இல்லை விஷமுள்ள பாம்பா என்பது நமக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த விடீயோவின் பின்புறத்தில் சில பெண்மணிகள் பேசுவது போன்ற சத்தம் வருகிறது. ஆகையால் அவர்கள் தெரிந்தே தான் அந்த குழந்தையை பாம்போடு விளையாடு விட்டுள்ளார் என்பது புரிகிறது. இந்த பாம்பு தினமும் இந்த குழந்தையோடு விளையாடுவது போன்ற தோற்றத்தை தான் இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

இளங்கன்று பயம் அறியாது என்று கூறுவார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த குழந்தை பாம்போடு விளையாடுவதை பார்க்கையில் நமக்கு சற்று வியப்பாக தான் உள்ளது. அது விஷம் நீக்கிய பாம்பாக ஒருவேளை இருந்தாலும் கூட பெரியவர்கள் அதன் அருகில் செல்ல நடுங்குவர். ஆனால் இந்த குழந்தை அத்தனை தைரியத்தோடு அந்த பாம்பை அணுகுவது வியப்பிலும் வியப்பு தான்.