- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஏற்ற வேண்டிய தீபம்

பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு காரணம் நம்முடைய வருங்கால சங்கதியினர் எந்தவித குறைவும் இல்லாமல் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக தான். அப்படி அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாம் மட்டும் கஷ்டப்பட்டால் பத்தாது. அவர்களும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அப்படி அவர்கள் உழைப்பதற்கு அவர்களுக்கு உள்ளேயே ஒருவித எண்ணம் உருவாக வேண்டும். இந்த எண்ணத்தை உருவாக்குவதற்கு நம்மால் முடியாது, கடவுளால் மட்டுமே முடியும். அப்படி கடவுளின் அருளை பெற்று குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஏற்ற வேண்டிய தீபம்

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று நாம் நினைத்து வழிபாடு செய்வோம். அதே போல் தான் நம்முடைய குழந்தைகள் வாழ்க்கையில் எந்தவித தடைகளும் வரக்கூடாது அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தீபம் ஏற்றி வழிபடும் முறையும் இருக்கிறது. இந்த தீபத்தை ஏற்றுவதோடு ஒரு எளிமையான பரிகாரத்தையும் நாம் செய்யும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் கண் திருஷ்டிகளும் விலகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஏதாவது ஒரு விளக்கு ஒன்று வேண்டும். அந்த விளக்கிற்கு கீழே கல்லுப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் விளக்கை வைத்து அதில் உங்களுடைய சக்திக்கு ஏற்றார் போல் நல்லெண்ணையோ அல்லது நெய்யோ ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு அந்த விளக்கில் இரண்டு கல் உப்பை போட வேண்டும். அடுத்ததாக இரண்டு மிளகாய் வற்றலை எடுத்து தீபம் எரியும் அந்த இடத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும்.

இப்படி வீட்டிற்குள் தீபம் ஏற்றி முடித்த பிறகு ஒரு நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி ஒரு புறம் கல்லுப்பையும் மற்றொரு புறம் குங்குமத்தையும் வைத்து வீட்டிற்கு வெளியே சென்று நிலை வாசலுக்கு முன்பாக நின்று இரண்டு கைகளிலும் எலுமிச்சம்பழத்தை வைத்து வீட்டை திருஷ்டி சுற்றுவது போல் மூன்று முறை வலப்புறமாகவும் மூன்று முறை இடப்புறமாகும் சுற்ற வேண்டும். பிறகு வலது கையில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை இடது புறமாக போட்டு விட வேண்டும். இடதுப்புறம் இருக்க கூடிய எலுமிச்சம் பழத்தை வலது புறமாக தூக்கி போட்டு விட வேண்டும்.

- Advertisement -

பிறகு உங்களுடைய முகம் கை கால்கள் இவை அனைத்தையும் கழுவி விட்டு வீட்டிற்குள் செல்லலாம். இந்த முறையில் திஷ்டி சுற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் கண்திருஷ்டிகளும் அனைத்தும் நீங்கும். மேலும் நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகளும் விலகும். இந்த தீபத்தை தினமும் நாம் ஏற்றி வர குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு என்னவெல்லாம் நடக்க வேண்டுமோ அவை அனைத்தும் ஒரு சில தினங்களிலேயே நடைபெறுவதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே:சக்தி வாய்ந்த எளிய 5 ஆன்மீக குறிப்புகள்
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டையும் பரிகாரத்தையும் முழு மனதுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் சங்கதிகள் சிறப்பாக வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்