மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு உதவிய சீனர்கள் பற்றி தெரியுமா ?

chinese-3
- Advertisement -

வரலாறு நெடுக பல நாடுகளும் அதன் கலாச்சாரங்களும் ஆர்ப்பரித்து எழுந்து உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, பின்பு காலவெள்ளத்தில் காணாமல் போயின. ஆனால் அமைதி வழியில் சென்ற நாகரீகங்கள் இன்று வரை நீடித்திருக்கின்றன. அந்த வகையில் உலகில் மிகவும் பழமையான நாகரீகங்களாக ஆசிய கண்டத்தில் இருப்பவை இரண்டு தான் ஒன்று “சிந்து சமவெளி” நாகரீகமான இந்திய நாகரீகம் மற்றொன்று சீன நாகரீகம். இந்த சீன நாகரீகத்தில் இந்திய ஆன்மீகம், பண்பாட்டு தாக்கம் எவ்வகையிலிருந்தது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

chinese king

பாரத நாட்டை போலவே பல தத்துவ ஞானிகளை உலகிற்கு அளித்த நாடு சீனா. மகாபாரதத்தில் பாண்டவர்கள் செய்த அஸ்வமேத யாகத்தில் அவர்களுக்கு தனது அன்பளிப்பாக விலைமதிப்பற்ற, மிகவும் உயர்தரம் வாய்ந்த சீன பட்டு துணிகளை, தனது தூதுவர்களின் மூலம் அப்போது ஆட்சி புரிந்த சீன பேரரசர் அனுப்பி வைத்ததாக சில குறிப்புக்கள் கூறுகின்றன. பாரதம் மற்றும் சீனம் என இரு தொன்மையான நாகரீகங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருந்தாலும் ஆன்மீக விடயங்களில் நமது நாட்டை மிகவும் உயர்வான இடத்தில் வைத்து மதித்தது சீனா.

- Advertisement -

இந்தியாவில் செழித்திருந்த புத்த மதத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கு பல புத்த மத பிட்சுகளை அந்நாட்டு பேரரசர்கள் அனுப்பினர். நமது நாட்டில் இருந்து அங்கு சென்ற ஆன்மீக பெரியோர்களை மிகுந்த மரியாதையுடன் எப்போதும் வரவேற்றனர் சீனர்கள். தமிழரான போதி தர்மர் சீன புத்த மத வரலாற்றில் உயரிய இடத்தில் வைத்து போற்றப்படுகிறார். 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் சோழ நாட்டை சேர்ந்த வணிகர்கள் சீன தேசம் சென்ற போது, அவர்கள் சீன நாட்டை ஆட்சி புரிந்த “டாங் வம்ச” அரசர்களால் மிகுந்த அன்புடன் வரவேற்க பட்டனர். அந்த சோழ வணிகர்களில் பலர் சிவனை வழிபடும் சைவர்களாக இருந்ததால், அவர்கள் தங்கள் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தனர். அதை கண்ட சீன மன்னன் அது குறித்து அவ்வணிகர்களிடம் கேட்டறிந்தான்.

vibudhi

அந்த வணிகர்களும் திருநீறு அணியப்படுவதற்கான காரணம் மற்றும் இறைவனாகிய சிவ பெருமானை பற்றி ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் மன்னருக்கு விளக்கினர். இதில் மிகவும் கவரப்பட்ட மன்னன் அவர்களிடமிருந்து திருநீறை பெற்று சிவ பெருமானை மனதார வணங்கி, தினமும் திருநீறு இட்டுக்கொள்ள தொடங்கினார். அவரின் குடும்பத்தினர் சிலர் சிவ வழிபாடும் சைவ மத வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள தொடங்கியதாக சீன வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன. அதே போல நமது சோழ மன்னர்களும் சீனர்களை சிறப்பிக்க தவறவில்லை. சோழ பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலில் அவர் சீனர்களுக்கு அளித்த சிறப்பினை சிற்பங்களாக இன்று காணமுடிகிறது. அதே போல நமது சோழ மன்னர்களும் சீனர்களை சிறப்பிக்க தவறவில்லை. சோழ பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலில் அவர் சீனர்களை சிறப்பிக்கும் வகையில் பல சீனர்களின் சிற்பத்தை வடிவமைத்துள்ளதை நாம் இன்றும் காண முடிகிறது.

Chinese in Thanjavur temple

நமது இந்து மதத்தில் குடும்பத்தில் பெற்றோர்கள் இறந்தால் அக்குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இறுதி சடங்கை செய்யும் வழக்கம் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த வழக்கத்தை சீனர்களும் இன்று வரை பின்பற்றி வருகின்றனர். இது போன்ற பல விடயங்கள் நமது பழமையான கலாச்சாரம் பிற நாடுகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

- Advertisement -