மன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்

chinnamasta
- Advertisement -

சின்னமஸ்தா தேவியின் உருவமானது பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமானதாக தான் இருக்கும். பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இவள் ஒரு கையில் ஆயுதத்தையும், மறு கையில் அறுக்கப்பட்ட தன் தலையையும், வைத்துக்கொண்டு ரத்த ஆறாக காட்சி தருகின்றாள். ஆனால் இந்தக் கொடூர தோற்றமானது தீயவர்களை அழிப்பதற்கு என்பதை உணர்த்துகின்றது. நல்லது நினைப்பவர்களுக்கு நன்மையே தருபவள் இந்த சின்னமஸ்தா தேவி. இவளுக்கு பிரசண்ட சண்டிகை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. ஆண் பெண் உடலின் மேல் ஏறி நின்று தாண்டவம் ஆடும் தோற்றம் கொண்டவள் இவள். சின்னமஸ்தா தேவியின் காலடியில் இருப்பது காமன் ரதி என்றும், இவர்களை தன் காலின் அடியில் மிதித்து கொண்டிருப்பதால், இவள் காமத்தை கட்டுப்படுத்துபவள் என்றும் கூறப்படுகிறது. எனவே காமத்தை அடக்கி, மரண பயத்தை நீக்கி, போரில் வெற்றிபெற இந்த சின்னமஸ்தா தேவியை வழிபடுவார்கள்.

chinnamasta

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்து வந்த நிஷூம்பா எனும் அரக்கனை அழிப்பதற்காக துர்காதேவி எடுத்த ஒரு அவதாரம் தான் இந்த சின்னமஸ்தா அவதாரம் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. சின்னமஸ்தா தேவி, அசுரனை அழிக்க சென்ற போது தன்னுடன் 2 தேவியர்களையும் துணையாக அழைத்துச் சென்றார்கள். அவர்கள் தான் வர்ணினீ, டாகினி. அந்த அசுரனை வதம் செய்த பிறகு சின்னமஸ்தா தேவியின் உடன் இருந்த 2 துணை தேவியரின் பசியைத் தீர்ப்பதற்காக, சின்னமஸ்தா தேவி தன் தலையை அறுத்துக் கொண்டு அதிலிருந்து வந்த ரத்தத்தின் மூலம் அவர்களது பசியை ஆற்றினார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சின்னமஸ்தா தேவியானவள், துர்கா தேவியினால் படைக்கப்பட்ட நேரமானது வீர ராத்ரீ என்று கூறப்படுகிறது. வீர ராத்ரீ என்பது செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி, மக நட்சத்திரம் இவை மூன்றையும் குறிக்கின்றது. இந்த சின்னமஸ்தா தேவியின் நாமங்களை எவரொருவர் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாட்களில், காலையில் எழுந்து உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு எதிரிகள் தொல்லையும், மரண பயமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் நாமத்தோடு சேர்த்து, சின்னமஸ்தா காயத்ரி மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான சின்னமஸ்தா தேவியின் காயத்ரி மந்திரம் இதோ.

chinnamasta

சின்னமஸ்தா தேவி காயத்ரி மந்திரம்

- Advertisement -

ஓம் சின்னமஸ்தாயை நம:

ஓம் வைரோசின்யை வித்மஹே சின்னமஸ்தாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

- Advertisement -

சின்னமஸ்தா தேவியின் திருநாமங்கள்:

சின்னக்ரீவா, சின்ன மஸ்தா, சின்ன முண்டதரா, அக்ஷதா, க்ஷோத க்ஷேமகரீ, ஸ்வக்ஷா, க்ஷோணீ சாச்சாதன க்ஷமா, வைரோசனீ, வராரோஹா, பலிதானப்ரஹர்ஷிதா, பலிபூஜித பாதாப்ஜா, வாசுதேவப்ரபூஜிதா

chinnamasta

எவர் ஒருவர் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், நல்லதை மட்டும் நினைத்து இந்த தேவியை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நன்மைகள் மட்டும் நடக்கும். தீய எண்ணங்களோடும், மற்றவர்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள் சின்னமஸ்தா தேவியை வணங்க வேண்டாம். ஏனென்றால் கெட்ட எண்ணங்களோடு இந்த தேவியை வணங்குபவர்களின் தலை துண்டிக்கப்படும் என்பது வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
வீடு கட்ட வேண்டும் என்ற உங்களது ஆசை நிறைவேற வேண்டுமா? அங்காரகனின் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chinnamasta mantra in Tamil. Chinnamasta manthiram in Tamil. Chinnamasta devi slogam in Tamil. Chinnamasta devi vazhipadu in Tamil.

- Advertisement -