சித்திரை முதல் வெள்ளியான இன்று, இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். அபூர்வ சக்திகளைப் பெற்றுத் தரக்கூடிய, அற்புதமான நாள் இது. தவறவிடாதீர்கள்!

amman-mantra

ஆடி மாத வெள்ளிக்கிழமை என்றால் தானே சிறப்பு. சித்திரை மாத வெள்ளிக்கிழமைக்கு என்ன சிறப்பு இருக்கிறது! என்ற சிந்தனை இந்த தலைப்பை படித்தவுடன் எல்லோருக்கும் வந்திருக்கும். ஆனால் ஆடி மாதத்தில் அம்மனுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ, அதே அளவிற்கான அற்புதமான சிறப்புகள் சித்திரை மாத வெள்ளிக்கிழமைக்கும் உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம். இதனால் சித்திரை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் சக்தி தேவியை மனதார நினைத்து வீட்டில் பூஜை செய்து வரவேண்டும். அந்த பூஜையை எப்படி செய்வது? எந்த மந்திரத்தை சொல்லி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

poojai arai

வழக்கம் போல உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜையை எப்படி செய்கிறீர்களோ அதன்படியே செய்யலாம். காலையில் பூஜை செய்வதாக இருந்தால் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம். மாலை பூஜை செய்வதாக இருந்தால், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம்.

பெண்கள் இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்யும் போது முழுக்க முழுக்க அம்மனை மனதார நினைத்து செய்ய வேண்டும். அதாவது சக்தி தேவியின் அபரிவிதமான ஆற்றலைப் பெறுவதற்கு இந்த தினம் மிகவும் உரிய தினமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியமானது இந்த பூஜையை செய்வதன்மூலம் உண்டாகும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

irukkankudi-amman

எல்லா பெண்களும் அந்த பராசக்திக்கு நிகராக போற்றப்படுபவர்கள் தான். இப்படியிருக்க அந்த உமாதேவியின் அருளை முழுமையாகப் பெற்று விட்டோமேயானால் இந்த உலகத்தில் சுலபமாக எதையுமே வென்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பெண்களுக்குள் வந்துவிடும். இப்படிப்பட்ட அபரிவிதமான இந்த சக்தியை, இந்த ஒரு மந்திரம் கொடுக்கும் என்றால், அதை உச்சரிப்பதில் என்ன தவறு இருக்கிறது. உங்களுக்கான அந்த மந்திரம் இதோ..

- Advertisement -

“ஓம் ஸ்ரீம் உமா தேவியே போற்றி”

இந்த மந்திரத்தை கிழக்குப் பக்கமாக அமர்ந்து 108 முறை மனதார உச்சரியுங்கள். அதன்பின்பு உங்களது கோரிக்கைகளை உமாதேவியிடம் சொல்லுங்கள். அது கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சித்திரை மாதம் வரும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை சொல்லி, உங்களது பூஜையை நிறைவு செய்யுங்கள். அபரி விதமான மாற்றத்தை, அனுபவப்பூர்வமாக உங்களாலேயே உணர முடியும்.

Amman Adiperukku

அதாவது உங்கள் வீட்டுப் பூஜையறையில், தீபம் ஏற்றி வைத்து தீப, தூப ஆராதனை காட்டி, வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, கிழக்குப் பக்கமாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களால் முடிந்த நைவேதினத்தை இறைவனுக்கு படைக்கலாம். வேறு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை உங்களது பூஜையை மனதார செய்யுங்கள். கட்டாயமாக வெற்றி நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமியிடம் உரையாடி, உங்களின் கோரிக்கைகளை வைக்க வேண்டுமா? இந்த ஒரு மந்திரம் போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Uma devi Tamil. Manthiram in Tamil. Chithirai matha sirappugal. Amman manthiram in Tamil.