நாளை சித்திரை வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்வதால் மிகுதியான பலன்கள் உண்டு

kalabairavar

தமிழ் மாத கணக்கின் படி ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் திதிகள் அனைத்துமே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கிரி தினங்களாகவே இருக்கிறது. இதில் வளர்பிறை தேய்பிறை காலங்களில் எட்டாவது திதியாக வரும் அஷ்டமி திதி சக்தி வாய்ந்த ஒரு திதி தினமாகும். அஷ்டமி என்றாலே பைரவ மூர்த்திக்கு உரிய தினம் என்பது நம்மில் பலர் அறிந்தது தான். இங்கு சித்திரை மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை எந்த முறையில் வழிபட்டு சிறப்பான பலன்களை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

kaala bairavar

மங்களகரமான காரியங்கள் அனைத்தும் விரும்பி செய்யப்படும் ஒரு மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. இம்மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களுமே மகத்துவம் வாய்ந்தவையாகும். அதிலும் இந்த சித்திரை மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு செய்வதால் நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும்.

சித்திரை வளர்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ கால பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறந்ததாகும். வளர்பிறை அஷ்டமி தினம் அதிகாலையில் எழுந்து, குளித்து உடல் மற்றும் மன சுத்தியுடன் காலை முதல் மாலை வரையில் உணவு ஏதும் உண்ணாமல் ஸ்ரீ கால பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று ஸ்ரீ கால பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, பூசணிக்காயில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து ஸ்ரீ கால பைரவரை வழிபட வேண்டும். காலபைரவர் கோயில் அருகில் இல்லாதவர்கள் வேறு எந்த பைரவ மூர்த்தியையும் கால பைரவராக உருவகித்து வழிபடலாம்.

kalabairavar

சித்திரை வளர்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்ரீ கால பைரவரை வழிபடுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கும. பாத சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி நடக்கும் ராசியினருக்கு சனியினால் ஏற்படும் பாதகமான பலன்கள் குறைந்து நன்மைகள் உண்டாகும். உங்களையும், உங்கள் வீட்டையும் பிடித்திருக்கும் துஷ்டசக்திகள் நீங்கும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒழியும். நீண்ட நாட்களாக இருக்கின்ற நோய்கள் நீங்க தொடங்கி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மனநிறைவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு செய்வினை உள்ளதா என்பதை கண்டறியும் வழிகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai valarpirai ashtami in Tamil. It is also called Valarpirai ashtami in Tamil or Sri kalabhairava valipadu in Tamil or Chithirai matham in Tamil or Chithirai matha sirappugal in Tamil.