உங்களுக்கு செய்வினை உள்ளதா என கண்டறியும் வழிகள்

seivinai

மாந்திரீக கலை என்பது மனிதர்கள் நன்மையான பலன்களை பெறுவதற்கு சித்தர்களாலும், மகான்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான கலை ஆகும். அப்படியான இந்த மாந்திரீக கலையை ஒரு சிலர் பிறருக்கு தீங்கு விளைவிக்கவும் பயன்படுத்துகின்றனர். பிறருக்கு செய்வினை செய்தல் என்பது இத்தகைய தீய மாந்திரீக கலையில் ஒரு பகுதியாகும். இவற்றில் எல்லாம் நம்பிக்கை அற்றவர்கள் பலர் உள்ளனர். அதே நேரம் இவற்றை நம்புவர்களும் இருக்கின்றனர். அப்படி இந்த செய்வினை, தீய மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு பிறர் செய்வினை மாந்திரீக ஏவல்கள் செய்துள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

Seivinai

தீய மாந்திரீக கலைகளை பயன்படுத்தி எதிராளிகளால் தங்களுக்கு செய்வினை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள், மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து கொண்டு, அதனுடன் சாம்பிராணி பொடியும் கலந்து 3 நாட்களுக்கு வீடு முழுவதும் தொடர்ந்து புகை போட்டு வர வேண்டும். இப்படி புகை போட்டு வரும் காலத்தில் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் உடல் நிலை பாதிப்பு ஏற்படுவது உங்களுக்கு செய்வினை செய்யப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிற ஒரு முக்கிய அறிகுறியாகும்.

நாம் பிறர் வீடுகளில் சாப்பிடும் போது, அந்த உணவுகளில் நம் எதிராளிகளால் செய்வினை செய்யப்பட்டிருக்கலாம் என கருதுபவர்கள் முருங்கை இலைச்சாறு சிறிதளவு எடுத்து உங்களின் உள்ளங்கையில் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கையில் இருக்கும் அந்த முருங்கை இலைச்சாறு உறைந்து கட்டியாக மாறினால் உங்களுக்கு செய்வினை பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

maruthani vidhai

எந்த ஒரு காரணமும் இல்லாமல், நீங்கள் உங்களுக்கு நெருக்கமான உறவினர்களையும், நண்பர்களையும் விலக்கி வைப்பது அல்லது அவர்கள் உங்களை விலக்கி வைப்பது, உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பினும் அவ்வப்போது சிறு சிறு நோய் பாதிப்புக்கு உள்ளாவது, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை மற்றும் மன அமைதி இல்லாத நிலை போன்றவை செய்வினை பாதிப்பு நமக்கு ஏற்பட்டிருப்பதை காட்டும் பொதுவான அறிகுறிகளாகும்.

- Advertisement -

shoulder pain

மேலும் உடலின் தோள்பட்டை பகுதியில் அதிக வலி மற்றும் தாங்க முடியாத அளவில் பாரம் அழுத்துவது போன்ற உணர்வு, ஈடுபடும் எந்த ஒரு காரியத்திலும் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் நிலை, ஆண் அல்லது பெண் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தும் காரணமின்றி அதிக அளவில் தலைமுடி உதிர்வது, கை கால்களில் இருக்கும் நகங்கள் கறுத்துப் போவது, அடிக்கடி மனதில் ஏற்படும் தற்கொலை குறித்த எண்ணங்கள் என இவை அனைத்தும் செய்வினை பாதிப்பு நமக்கு ஏற்பட்டு இருப்பதை தெளிவாக காட்டும் அறிகுறிகளாகும்.இதையும் படிக்கலாமே:
இந்த 8 தானத்தை பெண்கள் செய்தால் வம்சத்திற்கே பலன் உண்டு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Seivinai effect symptoms in Tamil. It is also called as Dushta sakthi in Tamil or Seivinai pathippu in Tamil or Manthriga pathippu in Tamil or Seivinai iruppadhai arivadhu eppadi in Tamil.