நாளை(15/4/2022) சித்திரை வெள்ளிக்கிழமையில் இந்த 1 பொருளை வாங்கினால் நீங்களும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை அடையலாம் தெரியுமா?

lakshmi-salt-jaadi
- Advertisement -

சித்திரை வருடப்பிறப்பு முடிந்து வரும் முதல் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு ரொம்பவே விசேஷமான ஒரு நாளாக கருதப்படுகிறது. சித்திரை பிறப்பன்று வாங்க வேண்டிய முக்கிய பொருட்களை வாங்க முடியாமல் தவறவிட்டவர்கள், இந்த வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறப்பம்சமாக இருக்கிறது. மேலும் சித்திரை வெள்ளிக்கிழமையில் கட்டாயம் இந்த ஒரு பொருளை காசு கொடுத்து கடையில் வாங்கி வீட்டில் கொண்டு வந்து வைத்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்! அது என்ன பொருள்? எப்படி வாங்க வேண்டும்? என்பது போன்ற தகவல்களை தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்பதன் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்குவது விசேஷமானது. நீங்கள் உப்பு வாங்கும் பொழுது கண்டிப்பாக வெள்ளிக்கிழமையாக பார்த்து வாங்கினால் வீட்டில் வறுமைக்கு இடமே இல்லாமல் போகும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் உப்பு வாங்கி வைக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை.

- Advertisement -

தூள் உப்பை விட, கல் உப்பு சிறந்ததாக இருந்தாலும் சமையலில் அதிக உப்பு சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், குடும்ப நலனுக்கும் நன்மை அல்ல. எப்பொழுதும் 90% உப்பை மட்டும் போட்டு சமைக்க வேண்டும். 10 சதவீதம் உப்பு குறைவாக இருந்தால் தான் உங்களுடைய உடல் ஆரோக்கியம் நீண்ட நாள் பலமாக இருக்கும். ஒரு துளி உப்பு அதிகம் இருந்தாலும் மெல்ல மெல்ல உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படத் துவங்கும்.

குறிப்பாக சிறுநீரக கோளாறுகள் வருவதற்கு இந்த உப்பு அதிகரிப்பு காரணமாக இருக்கிறது. எனவே தினமும் நீங்கள் சமைக்கும் பொழுது நீங்கள் எப்பொழுதும் போடும் உப்பை விட 10 சதவீதம் குறைவாக போட்டுக் கொள்வது நல்லது. சித்திரை திருவிழா அன்று வீட்டில் தானியங்கள், செல்வங்கள் சேர்வதற்கு நகை, நவதானியங்கள், உப்பு, மஞ்சள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். வாங்க தவற விட்டவர்கள் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை அன்று இதனை வாங்கி கொள்ளலாம்.

- Advertisement -

நீங்கள் இப்பொருட்களை வாங்கும் பொழுது காசு கொடுத்து வாங்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் பணமானது உங்களுடைய உழைப்பில் இருந்து வந்த பணமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நேர்மையாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து செலவு செய்து நீங்களே கடைக்கு போய் கல் உப்பு பாக்கெட் ஒன்றை வாங்கி வாருங்கள். அதை வீட்டில் கொண்டு வந்து உப்பு ஜாடியில் முழுவதுமாக நிரப்பி வையுங்கள்.

அது மட்டுமல்லாமல் ஒரு சிறிய செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் முழுவதுமாக தலை தட்டாமல் குவித்து கல் உப்பு போட்டு பூஜை அறையில் வைத்து மகாலட்சுமிக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து, மல்லிகை மலர் சாற்றி வாசனை மிகுந்த தூப, தீப, ஆரத்தி காண்பித்தால் அவ்வருடம் முழுவதும் அள்ள அள்ள குறையாத பண வரவும், செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த இந்த கல் உப்பை சித்திரைத் திருநாளன்று வாங்காவிட்டாலும் இந்த வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக வாங்குங்கள். கல் உப்பு மட்டுமல்லாமல் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் தூள், ஏலக்காய் போன்றவற்றையும் வாங்கலாம்.

- Advertisement -