இன்று ஒருநாள் கிரிவலம் சென்றால் எத்தனை அறிய பலன்கள் உண்டு தெரியுமா ?

sivan
- Advertisement -

மாதம் மாதம் வரும் பௌர்ணமி தினமானது இறைவழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் வருடம் ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமி தினமானது சித்தர்களின் ஆசி பெறவும், இறைவனை வழிபடவும் மிக சிறந்த ஒரு அற்புதமான நாளாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நன்னாளில் கிரிவலம் வருவதால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம் வாருங்கள்.

pournami

நமது உடலிற்கு சூரிய சக்தி எப்படி ஆற்றலை தருகிறதோ அதே போல சந்திர சக்தியும் ஆற்றலை தருகிறது. அதிலும் இறைவழிபாட்டிற்கு உரிய தலங்களான திருவண்ணாமலை, சதுரகிரி, பொதிகை மலை போன்ற தளங்களில் பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தோடு மூலிகை காற்றும் கலந்து வீசும் இதை சுவாசிப்பதன் மூலம் நமது உடலிலும் மனத்திலும் பல விதமான அற்புத மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த நிகழ்வானது முழு நிலவு தினத்தன்று மட்டுமே அதிக அளவில் நிகழ்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

- Advertisement -

மாதம் மாதம் வரும் பௌர்ணமியை காட்டிலும் சித்ரா பௌர்ணமி அன்று இறை சக்தியின் ஆற்றல் அதிக அளவில் பூமியில் படர்கிறது. அதோடு பூமியில் இருந்து ஒருவித சக்தியும் எழும்புகிறது. இந்த சக்தியை தங்களுக்குள்ளும் கிரகித்துக்கொள்ள சித்தர்களும் யோகிகளும் சூட்சும வடிவில் கிரிவலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.

Siddhar

சித்ரா பௌர்ணமி அன்று குறிப்பாக திருவண்ணாமலையில் பல்லாயிரம் சித்தர்கள் ஏதோ ஒரு வடிவில் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. அதனால் எவர் ஒருவர் முழுமனதோடு சிவ சிந்தனையில் கிரிவலம் வருகிறார்களோ அவருக்கு சிவனின் அருளோடு சேர்த்து சித்தர்களின் பரிபூரண அருள் இன்று கிடைக்கும்.

- Advertisement -

அதே போல இன்று சித்தர்கள் வெளியில் வருவதால், சித்தர்களின் ஜீவ சமாதியில் விஷேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று சித்தர்கள் சமாதிக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி சித்தர்களை மட்டுமே மனதில் நிறுத்தி தியானம் செய்தால், ஏதோ ஒரு வடிவில் சித்தர்கள் நமக்கு காட்சி கொடுத்து அருளாசி புரிவார்கள் என்பது நம்பிக்கை.

Lord Sivan

சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வதோடு நிற்காமல், சிவ பக்தியில் மூழ்கி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதான வழங்கினால், நாம் கேட்டதை இறைவன் வழங்குவார். நமது எண்ணங்கள் ஈடேற சித்தர்கள் துணை நிற்பர். இதனால் திருவனாமலை, சதுரகிரி போன்ற திருத்தலங்களில் இன்று ஏராளமான அன்னதானங்கள் நடைபெறுவது வழக்கம்.

- Advertisement -

கிரிவலம் செல்ல இயலாதவர்கள் என்ன செய்யலாம்:

முக்கிய பணி காரணமாகவோ, அல்லது உடல்நல குறைவு காரணமாகவோ இன்று பலரால் கிரிவலம் செல்ல இயலாமல் போகலாம். அது போன்ற சூழ்நிலையில் இன்று விரதம் இருந்து சித்ரகுப்தனையும், சிவனையும் போற்றும் மந்திரங்களை ஜபிக்கலாம். நம்மால் முடிந்த அளவு பசியால் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். அரசு பள்ளியில் ஏழ்மை சூழ்நிலையில் படிக்கும் பிள்ளைகளுக்கு பேணா, நோட்டு புத்தகங்கள் வாங்கி தரலாம். மாலை வேலை வரை விரதம் இருந்து முழு நிலவை பார்த்த பிறகு உணவு உண்ணலாம். இப்படி நம்மால் முடிந்த எத்தனையோ விதமான பிராத்தனைகளை நாம் இன்று செய்யலாம்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதுவும் படிக்கலாமே:
சித்தர்களின் அருள் பெற உதவும் மந்திரம்

English Overview:
Here we described about the chitra pournami girivalam benefits in Tamil. If one walk around the mountains like Thiruvannamalai during full moon night of chithirai Tamil month then he will get grace of Lord Shiva and Siddhar.

- Advertisement -