நாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா ?

chithra-pournami
- Advertisement -

மேலைநாட்டினர் நமக்கு நாள்,வருடக் கணக்கை அறிமுகப்படுத்தும் முன்பே 27 நட்சத்திரங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வுகளை வைத்து மாதங்களை கணக்கிட்டு, கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள். சூரியனை அடிப்படையாக வைத்து அவர்கள் கணித்த 12 மாதங்களில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமான சித்திரை மாதம் முதலாவது மாதமாக கருதினர். இந்த சித்திரை மாதம் தமிழர்களின் ஆன்மீக வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நன்னாள் ஆகும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

sooriya-bagwan

சித்திரை மாதம் என்பது உலகிற்கே பகலில் ஒளியைத் தருகின்ற சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் அடையும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி என்று வெகுவிமர்சையாக ஆன்மீக அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று தான் நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் உச்சம் பெறுகின்றனர்.

- Advertisement -

சூரியன் என்பவர் நமது உடலுக்கு காரகன் ஆவார். சந்திர பகவான் என்பவர் நமது ஆத்மா மற்றும் மனதிற்கு காரகனாகிறார். மும்மூர்த்திகளில் சிவன் மற்றும் பார்வதி தேவி இந்த சூரிய சந்திர அம்சமாக கருதப்படுகின்றனர். எனவே இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் செல்வதற்கு ஏற்ற தினமாக இந்த சித்ரா பௌர்ணமி தினம் இருக்கிறது.

- Advertisement -

மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தான, தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்வு மேம்படும். சித்தர்கள் மகான்கள், ஞானிகள் போன்றோரின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

chitraguptan

நமது புராணங்களில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் செய்த பாவ புண்ணியங்களை கணக்கிட்டு அவனுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பதை தீர்மானிக்கும் எமதர்மராஜனின் கணக்காளராக சித்திரகுப்தன் இருக்கிறார். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

- Advertisement -

food

மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும். நீங்கள் இதுநாள் வரை செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்படும். பிறப்பு – இறப்பு எனும் வாழ்க்கை சக்கரத்தில் இருந்து விடுபட்டு முக்தி எனப்படும் வீடு பேறு கிடைக்கப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chitra pournami special in Tamil. It is also called as Chitra pournami sirappugal in Tamil or Chithirai matham in Tamil or Pournami valipadu palangal in Tamil or Chitra matha sirappugal in Tamil or Pournami viratham in Tamil.

- Advertisement -