40 வயதில் 50ஆ அசத்திய கெயில். சாதனை மேல் சாதனை. சதத்தை தொடர்ந்து இதிலும் சாதனையா ? என்ன சார் நீங்க

Gayle

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (22-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Holder

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதலில் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை துவங்கியது. சென்ற போட்டியில் சதமடித்த கெயில் இந்த போட்டியில் 50 ரன்களை குவித்தார். மேலும், அந்த அணியின் இளம் வீரரான ஹெட்மயர் சதமடித்து அசத்தியது மட்டுமின்றி போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் 40 வயதில் 50 அரைசதங்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை படைத்துள்ளார். மே.இ தீவுகள் அணியில் லாரா சந்தர்பால் அடுத்து இந்த சாதனையை படைக்கும் அடுத்த வீரர் இவர் ஆவார்.

Chris

மே.இ தீவுகள் அணியின் அசைக்க முடியாத வீரர்கள் பட்டியலில் அசைக்க முடியாத வீரராக மாறிய இவர் என்றுமே யூனிவெர்சல் பாஸ் தான்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய தொடரில் இனி சிங்கில் கிடையாது. அடிக்க போறது எல்லாம் பறக்க போகுது. ஹெலிகாப்டர் மூடுக்கு மாறிய தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்