ஆஸ்திரேலிய தொடரில் இனி சிங்கில் கிடையாது. அடிக்க போறது எல்லாம் பறக்க போகுது. ஹெலிகாப்டர் மூடுக்கு மாறிய தல தோனி – வைரல் வீடியோ

MS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 தொடரின் முதல் போட்டி நாளை (24-02-2019) துவங்க உள்ளது. இதற்காக இவ்விரு அணிகளும் இன்றும் தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்தனர்.

dhoni

இதில் இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி இந்த தொடரில் பின்வரிசை ஆட்டக்காரராக களமிறங்காமல் முன்கூட்டியே அதிரடி காட்ட திட்டமிட்டுள்ளார். எனவே, இனி ஸ்லோவாக ஆட போவதில்லை. பழைய தோனி போன்று அதிரடியில் பின்னி எடுக்க பயிற்சியினை மேற்கொண்டார்.

அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் பறக்க வேண்டும் என்று தூக்கி அடித்து பயிற்சி செய்தார். இதனை இந்திய அணியின் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த விடடேவ் இணைப்பு உங்களுக்காக :

எது எப்படியோ தோனி இந்த தொடரில் பழையபடி அதிரடி மாறினால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த வருடம் துவக்கம் முதலே தோனி சிறப்பாக ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை. அதற்கும் முன் ஒரு கடமை இருக்கிறது. தற்போது அதுதான் முக்கியம் – விராட் கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்