வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த துணியும், கையில் துவைத்த துணி போலவே பளிச்சென்று இருக்கும். இந்த டிப்ஸை யூஸ் பண்ணி ஒருவாட்டி வாஷிங் மெஷினில் துணியை துவைத்து பாருங்கள்.

washingmechine
- Advertisement -

நம்மில் நிறைய பேரது வீட்டில் வாஷிங் மெஷின் இருக்கும். இருப்பினும் பல பேர் துணியை, வாஷிங் மெஷினில் துவைப்பது கிடையாது. காரணம், கையில் சோப்பு போட்டு, பிரஷ் போட்டு துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த துணியில், அழுக்கு போவதில்லை என்ற கம்ப்ளைன்ட் நிறைய பேர் வீட்டில் உண்டு. சரி, இனி உங்களுடைய வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் இந்த முறையில் துவைத்து பாருங்கள். நிச்சயம் வித்தியாசத்தை உணர முடியும்.

முதலில் உங்களுடைய அழுக்குத் துணிகளை சுத்தமான தண்ணீரில் போட்டு 1/2மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் இருக்கும் அழுக்குத் துணிகளுக்கு ஏற்ப, பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் துணி துவைக்கும் பவுடரை போட்டு, நன்றாக கரைத்து விடுங்கள். பவுடர் கட்டிப்பிடித்து இருக்கக்கூடாது. பவுடர் அடியிலும் தங்கக்கூடாது. நீங்கள் லிக்விட் பயன்படுத்தினாலும், அந்த லிக்விட் போட்டு முதலில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். (துணி மூழ்கும் அளவிற்கு தான் தண்ணீர் இருக்க வேண்டும். ரொம்பவும் குறைவாக இருக்கக்கூடாது. ரொம்பவும் அதிகமாகவும் இருக்கக்கூடாது.)

- Advertisement -

இப்போது நல்ல தண்ணீரில் ஊற வைத்திருக்கும்  துணியை எடுத்து, சோப்பு தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். சோப்பு தண்ணீரில் 1/2 மணி நேரம் தான் துணிகள் ஊற வேண்டும். அதன்பின்பு அந்த அழுக்கு சோப்புத் தண்ணீரில் இருந்து உங்கள் துணியை எடுத்து, வாஷிங் மெஷினில் போட்டு, மீண்டும் பாதி அளவு பவுடர் போட்டு, எப்போதும் போல துணிகளை துவைத்துக் கொள்ளலாம்.

cloth2

தண்ணீரின் அளவும், பவுடரின் அளவும் எப்போதும் துணிகளுக்கு ஏற்பத்தான் இருக்க வேண்டும்.  அதிகமான தண்ணீரில் வாஷிங் மெஷினில் நாம் பவுடரை போடும்போது, துணிகளில் இருக்கும் அழுக்கு சுத்தமாக போகவில்லை. இதுதான் ஒரு முக்கிய காரணம். நீங்கள் என்ன தான் கையில் சோப்பு போட்டு டபிரஷ் போட்டு, வாஷிங்மெஷினில் போட்டாலும் உங்களுக்கு வராத பளிச் பளிச் மென்மை இந்த முறையை பயன்படுத்தி வாஷிங் மெஷினில் போடும் போது நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு மூலையில் பயன்படுத்தாமல் கிடக்கும் வாஷிங்மெஷினை எடுத்து, உபயோகப்படுத்தி பாருங்கள். உங்களுடைய துணிகளில் இருக்கும் கிருமி மொத்தமாக வெளியேற வேண்டும் என்றால், நீங்கள் கையில் துணிகளை துவைத்தாலும் சரி, வாஷிங் மெஷினில் துணியை துவைத்தாலும் சரி, இறுதியாக மூன்றாவது முறை, அலசும் போது, உப்பு தூள் ஒரு ஸ்பூன், ஒரு மூடி டெட்டால் போட்டு துணிகளை அலசி, வெயிலில் காய வைப்பது நமக்கு அதிகப்படியான நன்மை தரும்.

உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால், உங்களுடைய வீட்ல ஒரு முறை, ஃபாலோ பண்ணி பாருங்க! பிடிச்சிருந்தா மட்டும் தொடர்ந்து பின்பற்றி கொள்ளுங்கள். இல்லை என்றால், ஒரு முறையோடு நிறுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

இதையும் படிக்கலாமே
வெங்காயம் பூண்டு சேர்க்காத, இப்படி ஒரு சட்னியை எப்படி செய்வது? வித்தியாசமான, சுலபமான 2 நிமிடத்தில் சட்னி!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -