வெங்காயம் பூண்டு சேர்க்காத, இப்படி ஒரு சட்னியை எப்படி செய்வது? வித்தியாசமான, சுலபமான 2 நிமிடத்தில் சட்னி!

tomato-coriander-chutney
- Advertisement -

சில பேர் சில சமயங்களில், சில விரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். சில பேர், வெங்காயம் பூண்டை எப்போதுமே சமையலில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் அல்லவா? வெங்காய பூண்டு இல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கலுக்கு கூட இந்த சட்னியை சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம். சுலபமான ஒரு சட்னி ரெசிபியை தான், இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தச் சட்னி அரைக்க மொத்தமாக ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் தான் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் சட்னியும் கூட.

tomato

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடலைப் பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், வரமல்லி (தனியா) – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4 லிருந்து 5 காரத்திற்கு ஏற்ப, தக்காளி – 3 ஓரளவிற்கு பொடியாக நறுக்கியது இவை அனைத்தையும் கடாயில் போட்டு முதலில் நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் போட்ட கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சிவந்ததும் தக்காளி பழத்தை சேர்த்து 3 அமிலங்கள் வதக்கி, தக்காளி பழத்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கிய பின்பு, 1 கைப்பிடி அளவு கொத்த மல்லித்தழை சேர்க்க வேண்டும். ஒரு கொத்து அல்லது இரண்டு கொத்து  கருவேப்பிலை சேர்க்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லி தழை ஒரு நிமிடம் வதங்கிய பின்பு இறுதியாக, 2 கைப்பிடி அளவு தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து, கடாயை கீழே இறக்கி வைத்து நன்றாக ஆரவைத்து விடுங்கள்.

kothamalli 4-compressed

மிக்ஸி ஜாரில் இந்த கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் கெட்டி பதத்தில் தான் இந்த சட்னி அரைக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீர் பதத்தில் அரைத்து விடக்கூடாது.

- Advertisement -

chutney

இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்து, இந்த சட்னியை பரிமாறிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் கொத்தமல்லித்தழையை அதிகமாக வைத்துக்கொள்ளலாம். இதனுடன் புதினாத் தழையும் சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அவரவர் சுவைக்கு ஏற்ப காரத்தை கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பச்சை மிளகாயையும் வைத்து இந்த சட்னியை அரைக்கலாம். உங்களுடைய விருப்பம் தான். ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க புடிச்சிருந்தா மீண்டும் மீண்டும் செஞ்சு சாப்பிடுங்க.

இதையும் படிக்கலாமே
கார்த்திகை தீபத்திற்கு ஏற்றி வைத்த எல்லா மண் அகல் விளக்குகளையும், எண்ணெய் பிசுபிசுப்பு போக, கைபடாமல் 5 நிமிடத்தில் எப்படி சுத்தம் செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -