முகத்தில் போடும் இந்தப் பவுடருக்கு இத்தனை பவரா? ஒரு கரப்பான் பூச்சி கூட உங்க வீட்டில உயிரோடு இனி சுத்தாதுங்க. இந்த டிப்ஸ் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

நிறையபேர் வீட்டு சமையலறையில் இந்த கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும். நிறைய ஜாமான்கள் ஸ்டோர் செய்து வைத்து இருக்கக் கூடிய இடங்களிலும், இந்த கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். ஒரு சில கடைகளில் விற்கும் ஸ்ப்ரே வாங்கி அடித்து அந்த கரப்பான் பூச்சிகளை கொள்வார்கள். சிலபேருக்கு கெமிக்கல் கலந்த இந்த நச்சுத் தன்மை நிறைந்த ஸ்பிரே பிடிக்காது. என்ன செய்வது கரப்பான் பூச்சி தொல்லையோடு தான் சேர்ந்து வாழவேண்டும். சிலபேருக்கு கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே ஒரு அருவருப்பு இருக்கும். சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

ஜான்சன் பேபி பவுடரையே இந்த குறிப்புக்காக பயன்படுத்தி பாருங்கள். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஜான்சன் பேபி பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் சோடா – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 3 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவு தான். கரப்பான் பூச்சி கொல்லி தயார் ஆகிவிட்டது.

- Advertisement -

சிறிய சிறிய பிளேட் போல தேவைப்படாத தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கும் மேலே இந்த கலவையை நன்றாக தூவி, எந்த இடத்தில் கரப்பான் பூச்சி வருமோ, அந்த இடத்தில் இந்த பிளேட்டை வையுங்கள். கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டாம். தட்டில் வையுங்கள். சிங்கிற்க்கு அடியில், அலமாரிகளுக்கு அடியில் தானே இந்த கரப்பான் பூச்சிகள் ஒளிந்து கொண்டிருக்கும். அந்த இடத்தில் எல்லாம் பார்த்து இந்த பூச்சிக்கொல்லியை தட்டில் போட்டு வைத்து விட வேண்டும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இதை செய்யுங்கள். மறுநாள் காலை வந்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கரப்பாம்பூச்சி எல்லாம் எந்த நிலைமையில் இருக்கிறது என்று. எல்லா கரப்பான் பூச்சிகளும் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட உடனேயே இறந்திருக்கும். குளியலறையில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் அங்கேயும் இதை ஒரு பிளைட் வைக்கலாம்.

- Advertisement -

அசுத்தமாக இருக்கக்கூடிய இடத்தில்தான் இந்த கரப்பான் பூச்சிகள் வந்து குடியேறும். உங்கள் வீட்டு சமையல் அறையை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சிங்குக்கு அடியில் குப்பைக் கூடை வைக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் சுடுதண்ணீரை சிங்க் ஓட்டையில் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த கரப்பான் பூச்சிகள் அதிகமாக நம் வீட்டில் இருப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகும். எதற்கு இந்த கஷ்டம். உங்களுக்கு பிடித்தால் கடையில் விற்க்கக் கூடிய கரப்பான் பூச்சிக் கொல்லிகளை வாங்கி அடித்து சமையலறையை சுத்தம் செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் இப்படி ஏதாவது ஒரு குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வீட்டில் இருக்கும் கரப்பாம்பூச்சி பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

- Advertisement -