அட, சூப்பரான தேங்காய் பர்ஃபி செய்வது இவ்வளவு ஈஸியா? நம்ம வீட்டுலயும் ட்ரை பண்ணி பாக்கலாமே!

- Advertisement -

எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் தேங்காய் பர்பியும் கட்டாயம் இருக்கும். சுவையான தேங்காய் பர்பியை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான இந்த தேங்காய் பர்பி ரொம்ப ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு தான், இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் தேங்காய் பர்பி செய்து முடித்துவிடலாம்.

coconut2

தேங்காய் பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 2 கப், சர்க்கரை 1 1/2 கப், காய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 10 – பொடியாக நறுக்கியது, ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

Step 1:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, துருவிய தேங்காயை கொட்டி, இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். தேங்காய் நிறம் மாற வேண்டாம். வெள்ளை நிறத்தில் இருந்தால், பர்பி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேங்காய் 2 நிமிடங்கள் வதங்கிய பின்பு, தயாராக எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை கொட்டி, அதில் ஒரு கரண்டி அளவு பாலையும் சேர்த்து, நன்றாக கலந்து வேக விடவேண்டும். சர்க்கரை தண்ணீர் விட ஆரம்பிக்கும்.

coconut-burfi1

Step 2:
அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, தேங்காய் சர்க்கரை பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்தவுடன், இந்த கலவை கெட்டி பதத்திற்கு வரும். அதாவது மொத்தமாக 10 நிமிடங்கள் கழித்து, தேங்காய் சரியான பதத்துக்கு வந்துவிடும். சர்க்கரையிலிருந்து விட்ட தண்ணீர் அனைத்தும் சுண்டி, சர்க்கரை பாகு கூடி அல்வா பதத்திற்கு வரவேண்டும்.

- Advertisement -

Step 3:
தேங்காய் பர்பியானது தயாராவதற்குள், இன்னொரு அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி, முந்திரி பருப்பை போட்டு வறுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

coconut-burfi2

Step 4:
10 நிமிடங்கள் கழித்து தேங்காய் பர்பி கடையல் தயாரானதும், அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பையும், ஏலக்காய் தூளையும், பர்பி கலவையோடு சேர்த்து கிலரிவிட வேண்டும். ஒரு வட்ட வடிவமான தட்டில் நெய் தடவி, தயாராக இருக்கும் பர்பியை அந்த தட்டில் கொட்டி, ஒரு ஸ்பூனால் சதுரமாக தட்டி, ஒரு கத்தியைக் கொண்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி விட வேண்டும். அதன் பின்பு அதை நன்றாக ஆற விட வேண்டும்.

- Advertisement -

coconut-burfi3

ஆரிய பர்பி துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து பரிமாறினால் சூப்பரான ஸ்வீட் ரெடி! இரண்டு மூன்று நாட்களுக்கு எடுத்து வைத்தும் இந்த பரிபியை சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று‌. முக்கியமான குறிப்பு என்னவென்றால், தேங்காயை உடைத்து உடனேயே, துருவி பர்ஃபி செய்தோமேயானால் அதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். பழைய தேங்காயில் பர்பி செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால், உங்களுக்கு வரக்கூடிய கஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இந்தத் தவறு உங்கள் வீட்டில் நடக்கிறதா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -