இந்தப் பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால், உங்களுக்கு வரக்கூடிய கஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இந்தத் தவறு உங்கள் வீட்டில் நடக்கிறதா?

food
- Advertisement -

நாம் எந்த ஒரு பொருளை உதாசீனப்படுத்தினாலும் அது நம் கையில் நிலைத்து நிற்காது. வெறும் பணத்திற்கு மட்டும் இந்த கூற்று பொருந்தாது. நாம் பயன்படுத்தும் சிறிய குண்டூசியிலிருந்து, நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம்மிடம் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் உதாசீனம், அலட்சியப் போக்கு என்பது ஒரு மனிதனிடம் கட்டாயம் இருக்கவே கூடாது. இதேபோல்தான் நம்முடைய பழக்க வழக்கங்களில் ஏதாவது ஒன்று தவறு என்பதை, வீட்டில் இருக்கும் முன்னோர்கள் குறிப்பிட்டு உணர்த்தினால், அதையும் உதாசீனப் படுத்த கூடாது. அலட்சியப்படுத்தக் கூடாது. முன்னோர்கள் சொல்லக்கூடிய நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றாமல், அலட்சியப் படுத்துபவர்களுக்கும் நிச்சயம் நமக்கான தண்டனை உண்டு.

eating-food

அப்படி நம்முடைய வீட்டில் நாம் செய்யும் ஒரு சின்ன தவறை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோரும் இந்த தவறை செய்வார்கள் என்று சொல்லிவிடமுடியாது. சில பேர் வீடுகளில் இந்த தவறு நடக்கின்றது. அது எந்த தவறு? ஏன் செய்யக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

நம்முடைய வீட்டில் உணவு பொருட்களை சாப்பிட பயன்படுத்தக் கூடிய பொருள் என்றால், அது தட்டு. சில பேர் வீடுகளில் எச்சில் பண்ணி தட்டில் கூட சாப்பிட மாட்டார்கள். வாழை இலை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் வீடுகளில் வசதிக்கு ஏற்ப பிளேட் யூஸ் பண்றாங்க! நீங்கள் சாப்பிடுவதற்கு இப்படியாக எந்த பொருளை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், சில பேருடைய வீட்டில் சமைத்த பாத்திரத்திலேயே சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

அதாவது குழம்பு வைத்த பாத்திரத்தில், குழம்பு தீரப்போகும் கடைசி சமயத்தில், கொஞ்சமாக குழம்பு இருக்கும். சில பேர், அந்தக் குழம்பில், என்ன செய்வார்கள்? சாப்பாடை கொட்டி பிசைந்து, அப்படியே சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கும் அந்த குழம்பு பாத்திரத்தோடு, சாப்பாடு போட்டு கொடுப்பார்கள். இது மிகப்பெரிய தவறு.

- Advertisement -

சிலபேர் சாப்பாடு வடித்த சாப்பாட்டு பனையிலேயே, கொஞ்சமாக சாதம் இருக்கும். அந்த சாதத்தில், அந்த சாப்பாட்டை, குழம்பை ஊற்றி பிசைந்து அப்படியே வாயில் போட்டு சாப்பிடுவார்கள். இதுவும் தவறு. கட்டாயம் நாம் சாப்பிடும் போது நம் கையில் எச்சில் ஆகும். அந்த எச்சில் கையோடு மீண்டும் சமைத்த பாத்திரத்தில் கையை விடவே கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

tasting

நம்முடைய வீட்டில் நாம் சமைக்கும் அந்த பாத்திரமும் அன்னலட்சுமிக்கு சமமான ஒன்றுதான். அடுப்பில் வைத்து சமைக்கும் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, கடாயாக இருந்தாலும் சரி, அதில் எச்சில் செய்து சாப்பிடவே கூடாது. சிலபேர் வீட்டில் கடாயில், வறுவல் செய்துவிட்டு, அந்த எண்ணெயில் சாதத்தை போட்டு பிரட்டி கடாய் சாப்பாடு என்று சாப்பிடுவார்கள். அந்த சாதத்தை கடாயில் போட்டு பிரட்டுவது தப்பு கிடையாது. அதை ஒரு தட்டில் மாற்றி சாப்பிட வேண்டும். கடாயில் வைத்து எச்சில் பண்ணி சாப்பிடுவது தவறு.

- Advertisement -

tasting1

இதேபோல் அந்த பாத்திரத்தில் இருக்கக்கூடிய கடைசி சொட்டு குழம்பு, கடைசி சொட்டு பொரியல் இருக்கும் வரை, சுரண்டி சுரண்டி சிலபேர் சாப்பிடுவார்கள். இதுவும் தவறான ஒரு விஷயம்தான். எந்த ஒரு பாத்திரத்திலும் இருக்கக் கூடிய உணவுப் பொருட்களை, வழித்து ஒரு பருக்கை கூட இல்லாமல் சாப்பிடவே கூடாது. அதில் இருக்கும் கொஞ்சம் மிச்சத்தை வாயில்லா ஜீவன்களுக்கு போடவேண்டும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

cook1

குழம்பு வைக்கும்போது, ருசி பார்க்கும் பெண்கள் கூட, நம்முடைய எச்சில் அதில் கலக்காத அளவிற்குத்தான் ருசி பார்க்கவேண்டும். எல்லா பெண்களுக்கும் இந்த விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால், சில பேர் இதை கடைபிடிக்க மாட்டார்கள். அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் தான் இவை.

கையில் ஊற்றி குழம்பை ருசியைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், அந்த கையை அலம்பி விட்டு தான் மீண்டும் சமைக்கின்ற பாத்திரத்தை தொட வேண்டும். அதுமட்டுமல்லாமல், நமக்கு சாப்பிடுவதற்காக சமைக்கும் அதே பாத்திரத்தில், சில சமயம் கடவுளுக்கு நெய்வேத்தியமும் சமைப்போம் அல்லவா? ஆக சமைக்கும் பாத்திரத்தில் இனி எச்சில் பண்ணும் தவறை உங்களுடைய வீட்டில், நீங்கள் செய்யாதீர்கள்.

rice-cooker

இதேபோல் தான், சமைத்த உணவை சிறிய சிறிய கிண்ணங்களில் மாற்றி வைப்பார்கள். அதாவது கொஞ்சம் மிஞ்சியிருக்கும் அல்லவா? அதே கிண்ணத்தில் கூட சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் தட்டில் எடுத்து, பரிமாறிக் கொண்டு, அதன் பின்பு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது நமக்கு நல்லது.

eating-1

அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது! எங்களுடைய வீட்டில் நாங்கள் எல்லா பாத்திரத்திலும் எச்சில் செய்வோம். நாங்கள் நன்றாகத்தான் இருக்கின்றோம். எங்களுக்கு வசதி வாய்ப்பு குறைவே கிடையாது. என்று யாராவது விதண்டாவாத பேச்சுக்களை பேசுபவர்களும், இருக்கத்தான் செய்கிறார்கள்.

Annapoorani

ஒன்றை மட்டும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நேரம் நன்றாக இருக்கும்போது, நாம் செய்யக்கூடிய தவறுகள் நம்மை பாதிப்பது கிடையாது. நேரம் சற்று சரி இல்லாத சமயத்தில், நாம் செய்த தவறுகளுக்கான தண்டனைகள் இரட்டிப்பாக நம்மிடமே வந்து சேரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
யாருக்காவது சாப்பாடு போடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் உண்டாகும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -