பார்த்தாலே நாவில் சுவை ஊறும் ருசி மிகுந்த ‘தேங்காய் பர்பி’ 15 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?

coconut-burfi5

பர்பி வகைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் தேங்காய் பர்பிக்கு தனி ரசிகர்கள் உண்டு. நம்முடைய தாத்தா பாட்டிகளிலிருந்து, நம்முடைய அப்பா அம்மாவை தாண்டி, இப்போது நாம் பெற்ற குழந்தைகள் வரை அனைவரும் தேங்காய் பர்பியை விரும்பி உண்பார்கள். இதற்கு அதிக பொருட்களும் தேவையில்லை. அதிக நேரமும் ஆகப் போவதில்லை. மிகக் குறைந்த பொருட்களை கொண்டு, மிகக் குறைந்த நேரத்தில் அனைவரும் விரும்பும் சுவையான தேங்காய் பர்பி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

coconut-burfi

தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – தேவையான அளவிற்கு, முந்திரிபருப்பு – 10, நெய் – தேவையான அளவிற்கு.

தேங்காய் பர்பி செய்முறை விளக்கம்:
தேங்காய் பர்பி செய்வதற்கு முதலில் ஒரு முழு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் வரும் அளவிற்கு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் தேங்காய் பத்தைகளாக இருந்தால் அதன் மேல் தோலை சீவி எடுத்து நீக்கி விடுங்கள். அதன் பிறகு தேங்காயை துருவிக் கொள்ளுங்கள்.

coconut-burfi1

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் கடாய் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு இந்த தேங்காய் துருவலை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் நன்றாக நெய்யில் வறுபட்டதும் அதில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சர்க்கரை நன்கு கரையும் வரை தேங்காயை நன்றாக வதக்கி கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடம் வரை இதே போல் செய்து கொண்டிருந்தால் சர்க்கரை நீர்த்து தேங்காயுடன் இறுகிவிடும். அந்த சமயத்தில் ஏலக்காய் தூளை விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்புகளை நெய்யில் தனியாக வறுத்து இதனுடன் சேர்க்கலாம்.

coconut-burfi4

பர்பி போடும் அளவிற்கு ஒரு அகலமான தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு நெய் தடவி, நாம் செய்து வைத்த தேங்காய் பர்பியை அதில் ஊற்றி மேலே எல்லா பக்கமும் சமமாக வருமாறு அழுத்தி விடவும். நன்கு ஆறிய பின் கத்தியால் வில்லைகள் போட்டு தனி தனியாக வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான தேங்காய் பர்பி இப்போது தயார். தேங்காயில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். இதை பெரியவர்களை விட சிறியவர்கள் அதிகம் சாப்பிடலாம். இதில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் எடுத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே
வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவுமே இல்லாமல் சட்னி அரைக்க முடியுமா? இந்த சட்னி செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.