வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவுமே இல்லாமல் சட்னி அரைக்க முடியுமா? இந்த சட்னி செஞ்சு பாருங்க!

No onion Chutney
- Advertisement -

நம்முடைய வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சட்னி அரைக்க வேண்டும் என்றால் கட்டாயம் வெங்காயம், தக்காளி, தேங்காய் இதில் ஏதாவது ஒன்று அவசியம் தேவைப்படும். இது எதுவுமே இல்லாமல், புதுவிதமாக ஒரு சட்னியை அரைக்க முடியும். இது சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அந்த சட்னி எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். காரசாரமான இந்த சட்னி குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

No onion Chutney

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,  உளுத்தம் பருப்பு – 1/4 கப், வேர்க்கடலை – 1/2 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், வரமிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல் தோல் உரித்தது. புளி – தேவைக்கு ஏற்ப(மேற்குறிப்பிட்டுள்ள அலகுகளுக்கு பெரிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்தால் போதும்.), தேவையான அளவு உப்பு.

- Advertisement -

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, முதலில் 10 பல் பூண்டை போட்டு, வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக உளுத்தம்பருப்பு சேர்த்து பாதி அளவு சிவக்க வேண்டும். அதன்பின் வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்ததாக பொட்டுக்கடலை, மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு, புளியை கைகளால் பிய்த்து சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கை விடாமல் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

Kadaai

வேர்க்கடலை மட்டும், வறுத்த வேர்க்கடலையாக வைத்திருந்தால் அதிக நேரம் சிவக்க விடக்கூடாது. இறுதியாக சேர்த்து கொஞ்சம் வறுபட்ட பின்பு, இறக்கிக் கொள்ள வேண்டும். வருத்த இந்தப் பொருட்களை கடாயில் இருந்து வேறு, பாத்திரத்தில் மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பாக மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்தச் சட்னியை, மிக்சியில் இருந்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி எடுத்துக் கொண்டு, சிறிய தாளிப்பு போட வேண்டும்.

No onion Chutney

தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், வர மிளகாய், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் இவைகளை சேர்த்து தாளித்து கமகமவென்று கொட்டினால் சுவையான சட்னி தயார் ஆகிவிடும். தாளிக்கும்போது வர மிளகாயை இரண்டாகக் கிள்ளி விதையோடு தாளித்துக் கொட்டுங்கள். இன்னும் காரம் தூக்கலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் எந்த பொருட்களுமே இல்லை என்றாலும், வீட்டில் இருக்கும்  பொருட்களை வைத்து சுலபமாக சட்னியை தயார் செய்துவிடலாம்.

- Advertisement -