வில்லங்கமான பிரச்சனைகள் கூட விரைவாக தீர இந்த ஒரு விளக்கு ஏற்றினால் போதும்.

praying-vilakku

பொதுவாகவே மனிதர்களுடைய குணாதிசயம் என்பது எந்த ஒரு விஷயத்திலும் அடுத்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கும். மூன்று வேளை சாப்பிட சாப்பாடு, உடுக்க உடை, இருக்க இடம், நிம்மதியான உறக்கம் இவைகளுக்கு குறைவில்லாமல் நமக்கு ஆண்டவன் வழங்கியுள்ளான் என்று நினைத்துக் கொண்டு திருப்தியோடு சிலர் வாழவே மாட்டார்கள். இப்படிப்பட்ட குணம் படைத்தவர்கள் எப்போதுமே தன்னைவிட வசதி படைத்தவர்களை பார்த்து ‘இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள். நம்மால் முடியவில்லையே’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வசதிக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்றால், நம்மை விட வசதி படைத்தவர்கள் ஒரு கோடி ரூபாய் கடன் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் வசதியானது பெருகப்பெருக அதனுடனே பிரச்சினைகளும், வில்லங்கமும் பெருகிக் கொண்டே தான் இருக்கும். நம்மில் பல பேருக்கு இருக்கும் வில்லங்கமான பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வை காண தான் இந்த பதிவின் மூலம் ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Oorai in Tamil
Oorai in Tamil

அதிகப்படியான பணம் இருந்துவிட்டால் மட்டும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கின்றதா என்பதை கோடான கோடி கோடீஸ்வரர்களிடம் கேட்டால் தான் தெரிந்துகொள்ள முடியும். வசதியே இல்லாமல் ஒரு சிறிய குடிசையில் வாழ்பவருக்கு இருக்கும் மன நிம்மதி கூட வசதி படைத்தவர்களுக்கு இருக்காது. அதற்காக குடிசையிலே வாழ்க்கை நடத்தி விட முடியுமா? எப்படியோ வாயை கட்டி, வயிற்றைக் கட்டி சம்பாதித்து சேர்த்து வைத்து, கையில் இருக்கும் தங்க நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தைப் புரட்டி ஏதாவது ஒரு இடத்தையோ, வீட்டையோ வாங்கி இருப்போம். அல்லது இப்படியெல்லாம் புரட்டிய பணத்தை வைத்து புதியதாக ஒரு தொழிலைத் தொடங்கி இருப்போம். சில பேர் ஷேர் மார்க்கெட்டில் கூட முதலீடு செய்வார்கள்.

ஆனால் இவர்கள் சேர்த்து வைத்த பணத்தை முதலீடு செய்த இடம் ஏதாவது ஒரு வில்லங்கமாக இருக்கும். அதாவது நீங்கள் வாங்கிய நிலத்தை உங்களுக்கு சொந்தமில்லை என்று சொல்லி வழக்கு வரை போயிருப்பார்கள். இதேபோல்தான் நீங்கள் கட்டிய வீட்டில் ஏதாவது ஒரு வில்லங்கம் வந்து விடும். நீங்கள் புதியதாக தொழில் தொடங்கினால் அதில் தீர்க்கமுடியாத விவகாரங்கள் சில தடங்கலாக வந்து நிற்கும். இப்படி நம் முன்னேற்றப்பாதையில் செல்லும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நம் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. சிலர் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் வில்லங்கமான இடத்தில் முதலீடு செய்துவிட்டு, பல வருடங்களைக் கூட கடந்து இருப்பார்கள். அவர்களால் அதை மீட்டெடுக்கவே முடிந்திருக்காது.

coconut-diya

இப்படிப்பட்டவர்கள் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில், சுக்கிர ஓரை நேரத்தில் தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தேங்காயை சரிசமமாக இரண்டாக உடைத்து அதில் இருக்கும் குடுமியை எடுத்துவிட்டு, ஒரு பித்தளை தாம்பாளத்தில் மீதோ அல்லது செம்பு தாம்பாளத்தில் மீதோ பச்சரிசியை கொட்டி பரப்பி அதன்மேல் இரண்டு தேங்காய் முடிகளையும் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் போதும். இரண்டு தேங்காய் முடிகளிலும் ஒவ்வொரு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி வாரம் தோறும் தொடர்ந்து உங்கள் வீட்டு பூஜையறையில் திங்கட்கிழமை சுக்கிர ஓரையில் இந்த தேங்காய் விளக்கினை ஏற்றி வந்தால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது விரைவாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்த தீபத்தை இத்தனை வாரம்தான் கணக்காக ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை உங்கள் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும் வரை ஏற்றிக் கொண்டே இருக்கலாம்.

coconut-diya1

- Advertisement -

தேங்காய் தீபத்தை ஏற்றி விட்டோம். பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று சும்மாவே இருந்து விடக்கூடாது. பிரச்சினைகளை தீருவதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமோ அந்த முயற்சிகளில் நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்சினை விரைவாக தீர்வதற்கான வழியை இந்த பரிகாரம் காட்டுமே தவிர, மாய மந்திரங்கள் செய்து தானாகவே உங்களது பிரச்சனையானது தீர்ந்து விடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
தீராத கஷ்டங்களை கூட தீர்த்து வைக்கும் ஆஞ்சநேயர் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Coconut lamp benefits in Tamil. Coconut lamp benefits. Coconut deepam god. Thengai vilakku palangal in Tamil. Thengai deepam.