இட்லியை கொஞ்சம் வித்தியாசமா தேங்காய் பாலில் அதுவும் கோன் இட்லியாக செய்யலாமா? இந்த இட்லி மட்டும் செஞ்சு பாருங்க உங்க வீட்டு குட்டீஸ் ஜாலியா என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க.

cone ildy
- Advertisement -

இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைகளை சாப்பிட வைப்பது தான் அதிலும் காலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு கிடக்கும் போது அவர்களை சாப்பிட வைத்து அனுப்புவதெல்லாம் ஒரு பெரிய போராட்டம் என்றே சொல்லலாம் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தது போல பிடித்தமான ருசியில் செய்து கொடுத்த நிச்சயம் சாப்பிடுவார்கள் அப்படி நாம் எப்பவும் செய்யும் இட்லியை கொஞ்சம் வித்தியாசமாக எப்படி செய்து கொடுக்கப் போகிறோம் என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கப், உளுந்து – 3/4 கப், தேங்காய் பால் – 3/4 கப், உப்பு – 1 ஸ்பூன், சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன், ஈஸ்ட் -1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த இட்லி செய்ய முதலில் இட்லி அரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு தனித்தனியாக 5 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டையும் தனித்தனியாக அரைத்த பின் ஒன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது அரைத்த மாவில் தேங்காய் பால், உப்பு, ரெண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவை நன்றாக அடித்து வைத்து விடுங்கள். இப்போது ஒரு பவுலின் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஈஸ்ட் இரண்டையும் சேர்த்து கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கலந்து அதையும் மாவில் ஊற்றி நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மாவு மூன்று மணி நேரம் வரை அப்படியே இருக்க வேண்டும் மூன்று மணி நேரம் கழித்து வாழை இலையை எடுத்து கோன் போல உருட்டிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள் தண்ணீர் குடித்தவுடன் நம் தயார் செய்து வைத்திருக்கும் டம்ளரின் வாழை இலையில் இட்லி ஊற்றி அதை இந்த பாத்திரத்தில் வைத்து வேக விட்டு எடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் ரவை இருந்தா நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியான இந்த இன்ஸ்டன்ட் வடைய செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ஒரு சூப்பரான வடையை இதை விட சிம்பிளா செய்யவே முடியாது.

பத்து நிமிடம் வரை வேக விட்டு எடுத்தால் போதும் சுவையான தேங்காய் பால் கோல் இட்லி தயார் இந்த இட்லியுடன் சட்னி சாம்பார் என எதை வைத்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும் சிக்கன் குருமா வைத்து சாப்பிட்டால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதென்றால் இப்படி செய்யும்போது எதுவும் சைடு டிஷ் டே கேட்க மாட்டார்கள் அப்படியே சாப்பிடுவார்கள் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -