ஒரு கப் ரவை இருந்தா நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியான இந்த இன்ஸ்டன்ட் வடைய செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ஒரு சூப்பரான வடையை இதை விட சிம்பிளா செய்யவே முடியாது.

rava vadai
- Advertisement -

வடை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் பல வகை உண்டு ஒரு சிலருக்கு பருப்பு வடை பிடிக்கும் ஒரு சிலருக்கு மெதுவடை என மாறுமே தவிர மற்றபடி வடை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான். அப்படியான ஒரு வடை ரெசிபியை ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதிக டேஸ்ட் உடன் இருப்பதோடு மட்டுமில்லாமல் வித்தியாசமாக ரவையை வைத்து எப்படி உடனடியாக செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த வடை செய்வதற்கு முதலில் ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கைப்பிடி கருவேப்பிலை ஒரு கைப்பிடி கொத்தமல்லி இவை அனைத்தையும் நல்ல பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கி துருவி இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு பவுலில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயம் இவையெல்லாம் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்றாக பிசைந்து விடுங்கள். இப்படி செய்யும் போதே வெங்காயத்திலிருந்து நீர் விட்டு நாம் சேர்த்திருக்கும் பொருள்கள் எல்லாம் ஒன்றாக கலக்கும். இதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதையும் ஐந்து நிமிடம் பிசைந்து கொடுங்கள்.

இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு ரவையை சேர்த்து மறுபடியும் இதே போல செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றக் கூடாது இது மிக முக்கியம். இப்படி பிசைந்த பிறகு ரவை ஓரளவுக்கு கையில் எடுத்து பிடித்தால் உருண்டையாக பிடிக்கும் அளவிற்கு வர வேண்டும் இப்போது கால் கப் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் அதிகம் புளிக்காத தயிராக இருந்தால் நல்லது.

- Advertisement -

தயிர் சேர்த்த பிறகு இவை அனைத்தையும் மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்த பிறகு தட்டு போட்டு பத்து நிமிடம் வரை மூடி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் ரவை ஊறுவதோடு மற்ற பொருட்களில் எல்லாம் இந்த தயிரும் ஊறி வடை ஒரு வித்தியாசமான சுவையில் கிடைக்கும். இந்த நேரத்திற்குள்ளாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு நீங்கள் கலந்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து வாழை இலையில் எண்ணெய் தடவி தட்டி ஒவ்வொன்றாக போட்டு எடுங்கள். வாழை இலை இல்லாத பட்சத்தில் கையிலும் லேசாக எண்ணெய் தடவிய பிறகு வடையை தட்டுங்கள் அப்போது தான் ஒட்டாமல் சுலபமாக வரும்.

இதையும் படிக்கலாமே: கல்யாண வீட்டு சாம்பார் கமகமன்னு மணப்பதற்கு இந்த 1 பொருள் தாங்க காரணம். இந்த ரகசிய குறிப்பை தெரிந்து கொண்டால் நம் வீட்டிலும் தினம் தினம் மணக்க மணக்க விருந்து சாம்பார் தான்.

ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் சிவந்த பிறகு மறுபடியும் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். சுவையான இன்ஸ்டன்ட் ரவை வடை தயார். இந்த வடையை நீங்கள் ஒரு முறை செய்தால் போதும். இனி அடிக்கடி இதை தான் செய்வீர்கள். அது மட்டும் இன்றி இது செய்வது மிகவும் சுலபம்.

- Advertisement -