- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகேரள பெண்களை போல நீண்ட முடியையும், வெண்மையான முகத்தையும் பெற ஒரு கப் தேங்காய் பால்...

கேரள பெண்களை போல நீண்ட முடியையும், வெண்மையான முகத்தையும் பெற ஒரு கப் தேங்காய் பால் இருந்தால் போதும். முகப்பரு, தலை முடி உதிர்வு, முடி நுனி உடைதல் என அனைத்திருக்கு இது தீர்வாக இருக்கும்.

- Advertisement -

நம் வீட்டில் அன்றாட உணவுகளில் தவறாமல் இடம் பிடிக்கும் ஒரு பொருளாக தேங்காய் இருக்கின்றது. இந்த தேங்காய் துண்டுகளை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்தால், நமக்கு தேங்காய் பால் கிடைக்கும். இந்த தேங்காய் பாலை சமையல் செய்வதற்கு மட்டுமல்லாமல், பெண்களின் கூந்தல் மற்றும் முக அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இப்படி தேங்காய் பால் பயன்படுத்தி பெண்கள் செய்து கொள்ளக் கூடிய அழகு குறிப்புகள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

குறிப்பு 1 – முடி உதிர்வை கட்டுப்படுத்த தேங்காய் பால்
பெண்களுக்கு தலை முடி உதிர்வு, முடி நுனி உடைதல் போன்ற பிரச்சனைகள் மிகுந்த மனக்கவலையை உண்டாக்கும். இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க, நம் வீட்டிலேயே இருக்கும் செலவில்லாத ஒரு நிவாரணப் பொருள் தான் தேங்காய். இந்த தேங்காயை நன்கு அரைத்து, தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த தேங்காய் பாலை கைகளில் எடுத்து, உங்கள் தலை முடிகளின் வேர் மற்றும் தோல் பகுதிகளில் நன்கு ஊறும் அளவிற்கு, கைகளால் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

20 நிமிடங்கள் இந்த தேங்காய் பால் தலைமுடியில் நன்கு ஊறிய பிறகு, குளிர்ந்த நீரை தலைக்கு ஊற்றி, தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு இந்த தேங்காய் பால் மசாஜ் செய்வதால் முடி உடைதல், தலைமுடிகளின் பசபசப்புத் தன்மை போன்றவை நீங்கி பெண்களின் கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

குறிப்பு 2 – முகப்பரு நீங்க தேங்காய் பால்
எண்ணெய் பாங்கான சருமத்தை கொண்டவர்களுக்கு, முகத்தின் சருமத்தில் இருக்கின்ற மிக நுண்ணிய துவாரங்களில் எண்ணெய் கசடுகள் வெளியேறாமல், முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. தோளில் இருக்கின்ற நுண்ணிய துவாரங்களில் ஏற்படும் இத்தகைய அடைப்புகளை நீக்கும் சக்தி யை தேங்காய் பால் கொண்டுள்ளது.

- Advertisement -

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் பால் ஊற்றிக் கொண்டு, அதில் தேவையான அளவு ஓட்ஸ் தானியங்களை போட்டு, ஒரு 10 நிமிடம் அளவிற்கு ஊறவைத்து, அதன் பிறகு அந்த இரண்டையும் நன்கு அரைத்து, பேஸ்ட் பதத்தில் எடுத்து, அந்த ஃபேஸ் பேக்கை எண்ணைய் வழியும் முகம், முகப்பரு பிரச்சனைகள் கொண்டவர்கள் தங்களின் முகத்தில் நன்கு தடவி ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு, பிறகு இதமான தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை பெண்கள் இந்த முறையை கடைபிடிப்பதால் முகத்தில் எண்ணெய் வடிதல், முகப்பருக்கள் தோன்றுதல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

குறிப்பு 3 – முக அழகிற்கு தேங்காய் பால்
சில பெண்களுக்கு அவர்களின் தற்போதைய வயதை காட்டிலும் அதிகமான முகத்தோற்றம் இருக்கும். அதே போன்று சில பெண்களின் தோல் பொலிவிழந்து, சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை தரும். இதற்கான தீர்வை இப்போது பார்ப்போம். இரவில் 6 -7 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் அந்த பாதாம் பருப்புகளை தோல் சீவி பேஸ்ட் பதத்தில் அரைத்து கொண்டு, அதில் சிறிதளவு தேங்காய் பாலை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த ஃபேஸ் பேக்கையை பெண்கள் முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொண்டு, ஒரு 15 நிமிடம் வரை அப்படியே காய விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். தேங்காய் பாலில் செம்பு சத்து அதிகம் உள்ளது. அதேபோன்று பாதாம் பருப்புகள் தோலை மிருதுவாக்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதால், பெண்களின் முகத்தில் இருக்கின்ற முகத்தில் நீங்கி இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

சற்று முன்