எப்போதும் முகத்தை இளமையாகவே வைத்துக்கொள்ள வேண்டுமா? அதே போல முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டுமா? ஒரு கப் சோளமாவு இருந்தால் போதும்.

sola maavu face pack Tamil
- Advertisement -

முக அழகிற்கு மனிதர்கள் எப்போதும் தனி முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிக அக்கறை செலுத்துவதுண்டு. அந்த வகையில் வெயில் காலத்தில் முகத்தை பாதுகாக்கவும், எப்போதும் முகம் இளமையான தோற்றதோடு இருக்கவும் சோளமாவை பயன்படுத்தி இரண்டு அருமையான அழுகு குறிப்புகள் இதோ.

தற்போது வெயில் காலத்தில், சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்களின் முகம் மிகவும் கருத்துப் போய்விடும். இப்படி கருத்த இந்த தோல் பகுதிகள் மீண்டும் அதன் இயல்பான நிறத்தை அடைய ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோள மாவு போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான பசும்பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்கு கெட்டியான பேஸ்ட் பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சோள மாவு பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாக, முகத்தை இளம் சூட்டான தண்ணீரில் நன்கு கழுவி, துடைத்துக் கொள்ள வேண்டும், பிறகு இந்த சோள மாவு பேஸ் பேக்கை முகம் முழுவதும் நன்கு தடவிக் கொண்ட பிறகு, ஒரு 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படி தினம் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை செய்வதால் வெயிலில் கருத்து போன பெண்களின் முகம் மீண்டும் அதன் இயல்பான நிறத்தை பெறும்.

பெண்களின் முகம் பார்த்ததும் பளிச்சென மின்ன கீழ்க்கண்ட முறையை பெண்கள் பயன்படுத்தி பார்க்கலாம். ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோள மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர் சில துளிகள் ஆகிய இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

முகத்தில் இந்த ஃபேஸ் பேக்கை தடவுவதற்கு முன்பாக, முகத்தை இதமான தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக் பேஸ்ட் முகம் முழுவதிலும் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு 15 இல் இருந்து 20 நிமிடங்கள் வரை அந்த ஃபேஸ் பேக் காய விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே பெண்களின் முகம் தங்கம் போல் மின்னும்.

பொதுவாக எந்த வயதுடைய பெண்களுக்குமே, தாங்கள் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இளமையான தோற்றம் கொண்ட முகத்தை பெற ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோள மாவு, முட்டையின் வெள்ளை கரு, 2 டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகிய இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட வழுவழுப்பான பட்டு போன்ற கூந்தலை நீங்களும் பெற குறிப்பு

இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவுவதற்கு முன்பாக, முகத்தை இளம் சூடான நீரில் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் முதலில் கொஞ்சம் தடவி, அது காய்ந்த பிறகு அதன் மீது 2,3 லேயர்களாக தடவிக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் இந்த பேஸ் பேக் முகத்தில் நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பெண்கள் இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இளமையான தோற்றம் கொண்ட முகத்தினை பெறுவார்கள்.

- Advertisement -