குழந்தைகள் விரும்பி சாப்பிட இந்த தேங்காய் பால் கொழுக்கட்டையை ஒரு முறை செய்துதான் பாருங்கள். இதன் சுவைக்கு நீங்கள் எவ்வளவு செய்தாலும் கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் முழுவதுமாக தீர்ந்து விடும்

pall-kozhukattai
- Advertisement -

எவ்வளவு சுவையான உணவுகள் இருந்தாலும் இந்த இனிப்பு சுவைக்கு ஈடாகாது. இனிப்பு என்றாலே வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி பலரது வீட்டிலும் அடிக்கடி செய்யக்கூடிய இனிப்பு வகை என்றால் அது கேசரி, பாயாசம், பொங்கல் இவைகள் மட்டும் தான். கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும் உணவுகளை எவரும் செய்வது கிடையாது. ஆனால் குழந்தைகளுக்கு சற்று வேடிக்கையான உணவுகளை செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அரிசிமாவில் சிறுசிறு உருண்டைகள் செய்து, அதில் கொழுக்கட்டை செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விளையாட்டுத்தனத்தில் விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த தேங்காய் பால் கொழுக்கட்டையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முழு தேங்காய் – 1, பச்சரிசி – அரை கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய் – 2, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரைக்க பச்சரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி வடிகட்டி கொள்ள வேண்டும். அதன் பின்னர் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரத்திற்க்கு ஊற வைக்க வேண்டும். பிறகு இந்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியான மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மாவு சற்று தண்ணீர் பதித்தல் இருந்தது என்றால், இதனை சரி செய்ய அடுப்பின் மீது கடாய் வைத்து, அதில் இந்த மாவை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொடுக்கும் பொழுது, கெட்டியான மாவு பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு ஒரு தேங்காயை உடைத்து, அதனை தேங்காய் துருவல் பயன்படுத்தி பொடியாக துருவி கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்து, இரண்டு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக, அதாவது சிறிய கொண்டைக்கடலை அளவிற்கு உருட்டிக் கொள்ள வேண்டும். அதேபோல் அரிசி மாவு முழுவதையும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து விட வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து, அதனை அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, அரிசி மாவு உருண்டைகளை அதில் சேர்த்து வேக விட வேண்டும். அரிசி மாவு உருண்டைகள் நன்றாக வெந்ததும் இவற்றுடன் அரைக்கப் சர்க்கரை மற்றும் இரண்டு ஏலக்காயை தட்டி சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -