3 விசிலில் குக்கரில் அனைவரும் விரும்பும் சுவையில் அருமையான தேங்காய் பால் சாதம் ஈசியாக செய்வது எப்படி?

- Advertisement -

ஆரோக்கியமும், சுவையும் நிறைந்துள்ள இந்த தேங்காய்ப்பால் சாதம் செய்வது ரொம்பவே சுலபம். குக்கரில் மூன்று விசில் விட்டு எடுத்தாலே அருமையான தேங்காய் பால் சாதம் தயாராகிவிடும்! தேங்காயிலிருந்து எடுக்கக்கூடிய பாலில் இருந்து செய்யக்கூடிய இந்த ரெசிபி வித்தியாசமாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சப்பு கொட்டி சாப்பிடுவார்கள். இதனுடன் பன்னீர் கிரேவி அல்லது கொண்டைக்கடலை கிரேவி போன்றவற்றை தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சிலர் இதற்கு துவையலும் வைத்துக் கொள்வது உண்டு. ஈஸியான முறையில் எப்படி அருமையான தேங்காய் பால் சாதம் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் பால் – ஒன்றரை கப், தக்காளி – ஒன்று, பெரிய வெங்காயம் – 1, பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை – தலா 2, சோம்பு – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பாஸ்மதி அரிசி – ஒரு கப்.

- Advertisement -

செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, சோம்பு, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போன்றவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி இதில் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். இதனுடன் இரண்டாக வெட்டிய பச்சை மிளகாய்களையும் சேர்த்து வதக்குங்கள். லேசாக இவை வறுபட்டதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போக வறுத்துக் கொள்ளுங்கள். பச்சை வாசம் போனதும் ஒன்றரை கப் அளவிற்கு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய மல்லி தழை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை தூவி கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் அதிகம் சேர்த்தால் தேங்காய் பால் திரிந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்துள்ள ஒரு கப் அளவிற்கு பாஸ்மதி அரிசியை தண்ணீர் எல்லாம் வடிகட்டி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை அப்படியே சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுங்கள். அவ்வளவுதான், சுடச்சுட சுவையான தேங்காய் பால் தயார்!

இதையும் படிக்கலாமே:
சட்னியை எப்பவும் ஒரே மாதிரி அரைக்காமல் கொஞ்சம் வித்தியாசமா ரொம்ப டேஸ்டா இப்படி அரைச்சு பாருங்க. ஒரு முறை இதை அரைச்சி சாப்பிட்டா போதும் தினமும் உங்க வீட்ல இந்த சட்னி தான் செய்வீங்க.

இதனுடன் காரசாரமாக ஏதாவது ஒரு சைடிஷ்ஐ வைத்து நீங்கள் சாப்பிடலாம். அற்புதமான அசத்தலான சுவை நிறைந்த இந்த தேங்காய்ப்பால் சாதம் செய்வது ரொம்பவே ஈசி மற்றும் ஆரோக்கியமானதும் கூட! எனவே அடிக்கடி செய்து சாப்பிடுங்கள், குழந்தைகளுக்கு குறிப்பாக அடிக்கடி செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -