- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சட்னியை எப்பவும் ஒரே மாதிரி அரைக்காமல் கொஞ்சம் வித்தியாசமா ரொம்ப டேஸ்டா இப்படி அரைச்சு பாருங்க....

சட்னியை எப்பவும் ஒரே மாதிரி அரைக்காமல் கொஞ்சம் வித்தியாசமா ரொம்ப டேஸ்டா இப்படி அரைச்சு பாருங்க. ஒரு முறை இதை அரைச்சி சாப்பிட்டா போதும் தினமும் உங்க வீட்ல இந்த சட்னி தான் செய்வீங்க.

- Advertisement -

இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக நாம் பெரும்பாலும் சட்னியை தான் அரைப்போம். அந்த வகையில் வேர்க்கடலை சட்னி, பொட்டுகடலை சட்னி என இப்படியான வகைகள் தான் நமக்கு பெரும்பாலும் தெரிந்தது. இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் சுவை மிகுந்த ஒரு சட்னி எப்படி செய்வது என்று தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சட்னி அரைப்பதற்கு முதலில் 100 கிராம் பூண்டை நன்றாக தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கைப்பிடி நிறைய கறிவேப்பிலையை உருவி சுத்தம் செய்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து ஐந்து டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சட்னியை நல்லெண்ணெயில் தான் தாளிக்க வேண்டும். அதே நேரத்தில் எண்ணையும் கொஞ்சம் அதிகமாகத் தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இதை நாம் தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. எண்ணெய் காய்ந்த பிறகு 10 காய்ந்த மிளகாயை சேர்த்து நிறம் மாறாமல் லேசாக வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு இதே எண்ணெயில் உரித்து வைத்த பூண்டை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். அதன் பிறகு இதில் கருவேப்பிலையை சேர்த்து அதுவும் நன்றாக பொரிந்து வரும் வரை வதக்கிய பிறகு ஒரு சிறிய கோலி குண்டு அளவு புளியையும் சேர்த்து வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை சிறிது நேரம் அப்படியே ஆற விடுங்கள்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்த காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து மீதம் இருக்கும் எண்ணெய் இதிலே ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இதில் எண்ணெய் மட்டும் சேர்த்து அரைப்பதால் இது நைசாக அரைபடாது. கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும்.

ஒரு அரைத்த சட்னியை வேறு ஒரு பவுலில் மாற்றிய பிறகு இதன் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் மட்டும் ஊற்றி கலந்து விடுங்கள். ஒரு வேளை உங்களுக்கு பச்சை நல்லெண்ணெய் வாடை பிடிக்கவில்லை என்றால் இதை ஒரு தாளிப்பாக செய்தும் ஊற்றிக் கொள்ளலாம். இந்த சட்னியோடு சுட சுட இட்லி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மீதமான சாதம் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸ் தயார். இந்த ரெசிபி தெரிஞ்சி வச்சிக்கிட்டா இனிமேல் மீதமான சாதத்தை யாரும் வீணாக்க மாட்டீங்க.

அது மட்டும் இன்றி இப்போது உள்ள குழந்தைகள் பூண்டு கருவேப்பிலை போன்ற உடலுக்கு ஆரோக்கியமான பொருட்களை உண்பதே கிடையாது. இது போல செய்து கொடுக்கும் பொழுது நல்ல ருசியாக இருப்பதால் இவற்றையெல்லாம் ஒதுக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். உடலுக்கும் மிக மிக நல்லது இந்த சட்னி ரெசிபியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அடிக்கடி செய்வீங்க.

சற்று முன்