உங்க வீட்டு பிரஷர் குக்கர், விசில் வரும்போது கூட, இனி பொங்கி வழியவே வழியாது. இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்களேன்!

cooker
- Advertisement -

Tip No 1:
உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய சுவிட்சுகள், மற்ற இடங்களில் இருக்கக்கூடிய சுவிட்சுகள் எல்லாம் பிசுபிசுவென இருந்தால், அதை சுலபமாக சுத்தம் செய்து விட முடியும். முதலில் உங்கள் வீட்டின் மெயின் சுவிட்சை அனைத்து வைத்துவிடுங்கள். அதன்பின்பு ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அல்லது மெல்லிய காட்டன் துணியிலோ கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தொட்டு, ஸ்விட்ச்சை துடைத்து எடுத்தாலே போதும். நம் கை பட்டு கரையான, அழுக்கு, பிசுபிசுப்பு எல்லாம் ஒரு நொடியில் சுத்தமாகிவிடும்.

switch

Tip No 2:
இதே போல் தான் உங்கள் வீட்டில் மரத்தால் செய்யப்பட்ட கபோர்டு, பீரோ, இரும்பினால் செய்யப்பட்ட கபோர்டு, பீரோ எது இருந்தாலும் அந்த பொருட்களில் எல்லாம் நம் கைப்பட்ட அழுக்குகள், திட்டுகள் வட்ட வடிவத்தில் இருக்கும். குறிப்பாக கைப்பிடியைப் பிடித்து திறந்து மூடுகின்ற இடத்தில்! அந்த இடங்களை சுத்தமாக, சுலபமாக சுத்தம் செய்வதற்கு, இதேபோல்தான் ஒரு டிஷ்யூ பேப்பரில் அல்லது காட்டன் துணியில் நான்கு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு துடைத்தால் போதும். அந்த இடம் பளபளப்பாக மாறிவிடும். ஃப்ரிட்ஜின் கைப்பிடி பக்கத்துல கூட இந்த மாதிரி கரைகள் நமக்கு தெரியும். அந்த இடத்தையும் ஒருமுறை இப்படி சுத்தம் பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip No 3:
நீங்க வெளியே கிளம்பும்போது, உங்களுடைய ப்ளாக் ஷு சுத்தமாக இல்லை. உடனே ஒரு டிஷ்யூ பேப்பரில் 2 சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு, அந்த ஷுவை துடைத்தால் 30 செகண்டில் பளபளப்பாக மாறிவிடும். உங்கள் வீட்டில் பயன்படுத்தாத இரும்பு கத்தி, இரும்பு அருவாமனை, இரும்பு தேங்காய்த்துருவல், இந்த பொருட்களை எல்லாம் நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதன் பின்பு அதன் மேலே தேங்காய் எண்ணையை தடவி வைத்தால், அந்த பொருட்கள் அனைத்தும் துருப்பிடிக்காமல் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

cooker1

Tip No 4:
அடுத்தபடியாக மெயின் டிப்ஸ். உங்கள் வீட்டு குக்கர் விசில் அடிச்சா, உள்ள இருக்க குழம்பு, சாதம் எல்லாமே பொங்கி வெளியே வழியும். குக்கருக்கு உள் பக்கம் ரப்பர் போடும் இடத்தில், நீங்கள் எந்த எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்துவார்களோ அந்த எண்ணெயை லேசாக தடவி விட்டு, அதன் பின்பு குக்கரை மூட வேண்டும். சமையல் எண்ணெய்க்கு பதிலாக இந்த இடத்தில் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தடவும் எண்ணெய் கேஸ்கட் என்று சொல்லப்படும் ரப்பரில் படவேண்டும். சில பிரஷர் குக்கருகு, மேல் பகுதிகளில் ரப்பர் இருக்கும். அதாவது ஹாகின்ஸ் மாடல் குக்கருக்கு ரப்பர் மேல் பக்கத்தில்தான் இருக்கும் அல்லவா? அப்படி இருந்தாலும் கூட, மேலே லேசாக, மொத்தமாகவே 4 சொட்டு எண்ணெயை ஸ்பூனில் எடுத்து, வட்ட வடிவில் குக்கர் ரப்பர் இருக்கும் எல்லா இடத்திலும், படும்படி தடவி விட்டுவிட வேண்டும். நிச்சயம் குக்கர் பொங்கி வழியாது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip No 5:
அடுப்பில் பால் வைத்தாலும் சரி, சாதம் வைத்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி, பொங்க விடாமல் நம்மில் பலபேர் சமைக்கவே மாட்டோம். இப்படியாக அடுப்பில் எந்த ஒரு பொருளை வைத்து கொதிக்க வைத்தாலும், சூடு படுத்தினாலும், சமைத்தாலும் அந்த பாத்திரத்தின் மேல் ஒரு கட்டை கரடியை வைத்துவிடுங்கள். எந்த பொருளாக இருந்தாலும், பொங்கி மேலே எழும்பி, அந்த மரக்கரண்டியில் பட்டவுடன் உள்ளே போய்விடும். பொங்கி அடுப்பை அணைத்து, திண்ணையில் வழிந்து நமக்கு இரண்டு வேலையை வைக்காது.

tip5

Tip No 6:
லாஸ்ட் டிப்ஸ். சூப்பர் டிப்ஸ். பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி சமையலறையில் முட்டையை எடுக்கும் போது கட்டாயம் எப்பவாவது ஒரு முறை அதை கீழே போட்டு உடைக்க தான் செய்வோம். அதை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இனி உங்க வீட்ல கை தவறி கீழே விழுந்து முட்டை உடைந்து விட்டால், அதன் மேல் தூல் உப்பைத் தூவி, அதன் பின்பு சுத்தம் செய்யுங்கள். முட்டை நீச்ச வாடையும் அடித்தது. சுலபமாகவும் சுத்தம் செய்ய முடியும். ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சூப்பரான 5 சமையலறை டிப்ஸ். உங்க நேரத்தை மிச்சப்படுத்த, வேலையை சுலபமாக்க! மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -