அரை மூடி தேங்காய் இருந்தால் போதும் அரைக்குண்டான் சாப்பாட்டையும் ஒரே நொடியில் தீர்த்து விடலாம், இந்த சுவையான தேங்காய் துவையல் செய்தால்!

coconut-thengai-thuvaiyal2
- Advertisement -

சுவையான தேங்காய் துவையல் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம் மற்றும் டிபன் வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய் துவையலை, ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக 10 நிமிடத்தில் எப்படி டேஸ்டியான பாரம்பரிய முறையில் தேங்காய் துவையல் அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, உளுந்து – மூன்று தேக்கரண்டி, வரமிளகாய் – எட்டு, கட்டி பெருங்காயம் – ஒரு சிறு துண்டு, கருவேப்பிலை – இரண்டு இணுக்கு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
தேங்காய் துருவல் செய்வதற்கு முதலில் அரை முடி தேங்காயை பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு சிறிய கடாய் ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கரண்டியால் உளுந்தை மட்டும் தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வர மிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து வாசம் வர லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய்களையும் தனியாக எடுத்து மிக்ஸியில் சேருங்கள். அதே எண்ணெயில் கட்டிப் பெருங்காயத் துண்டு ஒன்றை கோலிகுண்டு அளவிற்கு சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மீதம் இருக்கும் எண்ணெயில் இரண்டு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து நன்கு வதக்கி அந்த கறிவேப்பிலையையும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார்கள் எல்லாம் நீக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஊற வைத்த புளிப் பேஸ்டையும் சேர்த்து, அரை மூடி துருவிய தேங்காயையும் போட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொரகொரப்பாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சுவையான தேங்காய் துவையலுக்கு சிறு தாளிப்பு ஒன்றை கொடுத்துக் கொள்ளலாம். அதற்கு தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை, இரண்டு பல் இடித்த பூண்டு ஆகியவற்றை தாளித்தம் செய்து துவையலுடன் சேர்த்து கலந்தால் அவ்வளவு டேஸ்டாக இருக்கும். நீங்களும் இதே போல ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -